Type Here to Get Search Results !

கலைமாமணி விருதுகளை அறிவித்துள்ளது தமிழக அரசு



தமிழக அரசு சார்பில் திரைத்துறை உட்பட பல்வேறு துறைகளில் சிறந்து விளங்குவோருக்கு கலைமாமணி விருது ஆண்டுதோறும் வழங்கப்பட்டு வருகிறது.  அந்தவகையில் தற்போது சிவகார்த்திகேயன், ராமராஜன், சரோஜா தேவி, சவுக்கார் ஜானகி உள்பட 42 பேருக்கு கலைமாமணி விருது வழங்கப்படுவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.

கலைமாமணி விருது பெறும் நடிகர்கள் 

ராமராஜன், சிவகார்த்திகேயன், யோகி பாபு ஆகியோருக்கு கலைமாமணி விருது வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.

கலைமாமணி விருது பெறும் நடிகைகள்

பழம்பெரும் நடிகைகள் சரோஜாதேவி, சவுகார் ஜானகி ஆகியோருக்கும், நடிகைகள் சங்கீதா, ஐஸ்வர்யா ராஜேஷ், தேவதர்ஷினி, மதுமிதா ஆகியோருக்கும் கலைமாமணி விருது அறிவிக்கப்பட்டுள்ளது. 

கலைமாமணி விருது பெறும் இசையமைப்பாளர்கள், பாடகர்கள்

இசையமைப்பாளர்கள் டி இமான், தீனா ஆகியோருக்கும், பாடகர்கள் சுஜாதா, அனந்து ஆகியோருக்கும் கலைமாமணி விருது வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

கலைமாமணி விருது பெறும் தயாரிப்பாளர்கள் 

கலைப்புலி எஸ் தாணு, ஐசரி கணேஷ் ஆகியோருக்கு கலைமாமணி விருது வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.

கலைமாமணி விருது பெறும் இயக்குனர்கள் 

கவுதம் மேனன், லியாகத் அலி கான், மனோஜ் குமார், ரவி மரியா ஆகிய நால்வருக்கும் கலைமாமணி விருது வழங்கப்பட உள்ளது.

கலைமாமணி விருது பெறும் சீரியல் நடிகர்கள் 

நடிகர் நந்தகுமார், நடிகைகள் சாந்தி வில்லியம்ஸ் மற்றும் நித்யா ஆகியோருக்கு கலைமாமணி விருது வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுதவிர ஸ்டண்ட் மாஸ்டர்கள் ஜாக்குவார் தங்கம், தினேஷ், நடன இயக்குனர்கள் சிவசங்கர், ஸ்ரீதர், எடிட்டர் ஆண்டனி, மெல்லிசை கோமகன், பாடலாசிரியர்கள் காமகொடியன், காதல் மதி, வசனகர்த்தா வி பிரபாகர், ஒளிப்பதிவாளர் ரகுனாத ரெட்டி ஆகியோருக்கும் கலைமாமணி விருது வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
Tags

Top Post Ad

Below Post Ad