கல்லூரி உதவி பேராசிரியர் மற்றும் ஜுனியர் ரிசர்ச் பெல்லோஷிப் தகுதிக்கான யுஜிசி – நெட் தேர்வு வரும் மே மாதத்தில் 11 நாட்கள் நடத்தப்பட உள்ளதாக தேசிய தேர்வு முகமை அறிவித்துள்ளது.
மத்திய கல்வி அமைச்சர் ரமேஷ் போக்ரியால் இதை உறுதி செய்துள்ளார். அதன்படி இந்த ஆண்டின் மே மாதத்தில் 2, 3, 4, 5, 6, 7, 10, 11, 12, 14 & 17 ஆகிய தேதிகளில் நெட் தேர்வு நடத்தப்பட உள்ளது.