Type Here to Get Search Results !

குடும்பத்தலைவிகளுக்கு மாதந்தோறும் ரூ. 1000 நிதி: ஸ்டாலின் வாக்குறுதி



குடும்பத்தலைவிகளுக்கு மாதந்தோறும் ரூ. 1000 உதவித்தொகை வழங்கப்படும் என திருச்சி மாநாட்டில் ஸ்டாலின் வாக்குறுதி அளித்தார்.

சட்டசபை தேர்தலை எதிர்நோக்கி, ‘விடியலுக்கான முழக்கம்’ என்ற பெயரில் தி.மு.க.,பொதுக்கூட்டம் திருச்சி சிறுகனூரில் இன்று மாலை தி.மு.க. தலைவர் ஸ்டாலின் தலைமையில் துவங்கியது.

தமிழிகத்திற்கான அடுத்த 10 ஆண்டுகளுக்கு தொலை திட்டங்களை அறிவித்து ஸ்டாலின் உரையாற்றினார். கூட்டத்தில் துரைமுருகன், நேரு உள்ளிட்டமூத்த தலைவர்கள் கலந்து கொண்டனர்.


கூட்டத்தில் ஸ்டாலின் பேசியது

* மத்தியில் கூட்டாட்சி, மாநிலத்தில் சுயாட்சி என்பதை உருவாக்கியது இந்த திருச்சி மாநகரம் தான். இதில் தி.மு.க., என்றும் உறுதியாக உள்ளது.

* தி.மு.க., ஆட்சியில் அனைத்து துறைகளிலும் தமிழகம் வளர்ச்சி அடைந்தது.

*திமு.க. உருவாக்கிய அடிப்படை கட்டமைப்பை சிதைப்பது தான் அ.தி.மு.க..வின் பழக்கமாக இருந்தது.

*நவீன தமிழகத்தை தி.மு.க., ஆட்சி தான் கட்டமைத்தது. அதனை சீர்குலைத்தது அ.தி.மு.க, ஆட்சி.

* கடல் அளவு தி.மு.க.,வின் சாதனைகளை சொல்ல வேண்டுமானால், தனி மாநாடு தான் போட வேண்டும்.

* பொருளாதாரம், நீர்வளம், வேளாண்மை, கல்வி, சுகாதாரம், நகர்புற வளர்ச்சி, ஊரக கட்டமைப்பு , சமூகநீதி ஆகிய துறைகளை வளர்த்தெடுப்பதே தி.மு.க. ஆட்சியின் முக்கிய நோக்கம்.

* ஒவ்வொரு ஆண்டும் 10 லட்சம் புதிய வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும்.

* அடுத்த பத்தாண்டுகளில் இரட்டை இலக்க பொருளாதார வளர்ச்சி எட்டப்படும்.

* கல்வி, சுகாதாரத்திற்கு செலவிடப்படும் நிதி மூன்று மடங்கு உயர்த்தப்படும்.

* குடும்பத்தலைவிகள் அனைவருக்கும் மாதந்தோறும் ரூ. 1000 உதவி தொகை வழங்கப்படும்.

* தனி நபர் நீர் பயன்பாடு ஆண்டுக்கு 9 லட்சம் லிட்டரில் இருந்து 10 லட்சம் லிட்டராக மாக அதிகரிக்கப்படும்.

* 10 லட்சம் ஹெக்டேராக உள்ள இருபோக சாகுபடி நிலப்பரப்பு 20லட்சம் ஹெக்டேராக உயர்த்தப்படும்.
*அனைத்து ஊராட்சி ஒன்றியங்களிலும் முன்மாதிரி பள்ளிகள் மருத்துவமனைகள் அமைக்கப்படும்.

* மருத்துவர்கள் செவிலியர்கள் , துணை மருத்துவர்கள் அனைத்து தொழிற் கல்வி பட்டதாரிகள் எண்ணிக்கை இரட்டிப்பாக்கப்படும்.

*பள்ளி கல்வியில் மாணவர்களின் இடை நிற்றலை 16 சதவீதத்தில் இருந்து 5 சதவீதமாக குறைக்கப்படும்
உணவு தானியம் கரும்பு பருத்தி சூரிய காந்தி உற்பத்தியில் தமிழகத்தை மூன்று இடங்களுக்குள் முன்னேற்ற நடவடிக்கை.
9.75 காங்கிரீட் வீடுகளை கட்டித்தருவதன் மூலம் குடிசை வாழ் மக்களின் எண்ணிக்கை 5 சதவீதமாக குறைக்க நடவடிக்கை.

* வறுமையில் வாடும் 1 கோடி பேரை மீட்டு வறுமையில்லாத தமிழகம் உருவாக்கப்படும்

* மனித கழிவுகளை மனிதனே அகற்றும் இழிநிலையை முற்றிலும் ஒழிப்போம்.

* தனிநபர் வருமானத்தை ஆண்டுக்கு ரூ.4 லட்சத்தை உயர்த்த நடவடிக்கை எடுக்கப்படும்.

*தமிழகத்தின் பசுமை பரப்பளவை உயர்த்த நடவடிக்கை

*ஓ.பி.சி, எஸ்.சி, எஸ்.டி கல்வி உதவித் தொகை இருமடங்கு உயர்த்தி வழங்கப்படும்.

*மனிதக் கழிவுகளை மனிதரே அகற்றும் இழிவு முற்றிலுமாக ஒழிக்கப்படும்

* வரும் மே.2-ம் தேதி தமிழகத்தில் புதிய விடியல் பிறக்கும்.

*அ.தி.மு.க., ஆட்சிக்கு முடிவுக்கு கட்ட கவுன்டவுன் துவங்கிவிட்டது.இவ்வாறு அவர் பேசினார்.

முன்னதாக சட்டசபை தேர்தல் தேதி அறிவிப்பதற்கு முன்னரே தி.மு.க. 11-வது மாநில மாநாடு நடத்திட முடிவு செய்யப்பட்டது. தேர்தல் தேதிகள் முன்கூட்டியே அறிவிக்கப்பட்டதால் மாநாடு நிகழ்ச்சிகள் ரத்து செய்யப்பட்டு, அதற்கு பதிலா பிரம்மாண்ட பொதுக்கூட்டம் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதில் 5 லட்சத்திற்கும் மேற்பட்ட தொண்டர்கள் குவிந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
Tags

Top Post Ad

Below Post Ad