நாடு முழுவதும் உள்ள பொதுத்துறை வங்கி அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் வேலைநிறுத்தத்தில் பங்கேற்பதால், காசோலை பரிவர்த்தனை மற்றும் வங்கி சேவைகள் கடுமையாக பாதிக்கக்கூடும்.
நாடு முழுவதும் உள்ள பொதுத்துறை வங்கி அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் வேலைநிறுத்தத்தில் பங்கேற்பதால், காசோலை பரிவர்த்தனை மற்றும் வங்கி சேவைகள் கடுமையாக பாதிக்கக்கூடும்.
இரண்டு பொதுத்துறை வங்கிகள் தனியார் மயமாக்கப்படும் என்று மத்திய பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து வங்கி ஊழியர்கள் நாடு முழுவதும் வருகிற 15 மற்றும் 16-ந் தேதி வேலைநிறுத்தத்தில் ஈடுபடுகின்றனர்.
இதுகுறித்து மத்திய அரசுடன் நடந்த பேச்சுவார்த்தையில் சுமூக முடிவு எட்டப்படாததால், இந்த வேலைநிறுத்தத்தை முன்னெடுத்து செல்ல அகில இந்திய வங்கி ஊழியர் சங்கம் முடிவு எடுத்துள்ளது.
நாடு முழுவதும் உள்ள பொதுத்துறை வங்கி அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் இந்த வேலைநிறுத்தத்தில் பங்கேற்பதால், காசோலை பரிவர்த்தனை மற்றும் வங்கி சேவைகள் கடுமையாக பாதிக்கக்கூடும்.
மேலும் வங்கிகளுக்கு இன்று சனிக்கிழமை மற்றும் நாளை (ஞாயிற்றுகிழமை) விடுமுறை நாட்களாகும். இதனால் வங்கி பணிகள் நடைபெறாது. விடுமுறையை தொடர்ந்து வேலைநிறுத்தமும் நடைபெறுவதால் தொடர்ச்சியாக 4 நாட்கள் வங்கிகள் மூடப்படுகிறது.
இதன் காரணமாக வங்கி சேவைகள் முற்றிலும் பாதிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து அகில இந்திய வங்கி ஊழியர் சங்கத்தின் பொதுச்செயலாளர் சி.எச்.வெங்கடாசலம் கூறியதாவது:-
நாடு முழுவதும் நடைபெறும் இந்த வேலைநிறுத்தத்தில் 9 லட்சம் பேர் கலந்து கொள்கிறார்கள். தமிழகத்தில் 88 ஆயிரம் வங்கி கிளைகள் மூடப்படுகின்றன. தமிழகத்தில் 14 ஆயிரம் வங்கி கிளைகள் மூடப்படுகிறது. 60 ஆயிரம் பேர் வேலைநிறுத்தத்தில் ஈடுபடுகின்றனர்.
4 நாட்கள் வங்கிகள் மூடப்படுவதால், வாடிக்கையாளர் சேவை பாதிக்கப்படும். ரொக்கம் மற்றும் காசோலை பரிமாற்றம் முடங்கும் நிலை ஏற்படும். ஆனாலும் ஏ.டி.எம்.கள் முழுமையாக செயல்பட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. முழு அளவில் பணம் நிரப்பி வைக்கப்படுகிறது.
வங்கி ஊழியர்கள் போராட்டத்துக்கு விடுதலை சிறுத்தைகள் கட்சி ஆதரவு அளித்துள்ளது. தனியார் மய கொள்கையை கைவிட வேண்டும். கார்ப்பரேட்டுகளுக்கு சேவகம் செய்யும் போக்கை நிறுத்திக் கொள்ள வேண்டும் என்று அக்கட்சியின் தலைவர் திருமாவளவன் வலியுறுத்தி உள்ளார்.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் கூறும்போது, தனியார் மயமாக்கும் கொள்கை மக்கள், தொழிலாளர்களுக்கு விரோதமானது. மத்திய அரசு இத்தகைய கொள்கைகளை கைவிட்டு பொதுத்துறை வங்கிகளை பலப்படுத்த வேண்டும் என்றார்.