கர்நாடகத்தில் அடுத்த 15 நாள்களுக்கு பள்ளி, கல்லூரிகளை மூடப்போவதில்லை என அந்த மாநில அரசு அறிவித்துள்ளது.
இதுபற்றி அந்த அரசு தெரிவித்தது:
"அடுத்த 15 நாள்களுக்குப் போராட்டங்கள், பேரணிகள் உள்ளிட்டவற்றுக்கு அனுமதி கிடையாது. அடுக்குமாடி குடியிருப்புகளில் கரோனா பாதிப்பு அதிகரிக்கிறது. எனவே, இன்று முதல் கொண்டாட்டங்களுக்கு அனுமதி கிடையாது. பொது முடக்கம் இருக்காது. முகக் கவசம் அணியாதவர்கள் மீது கடுமையான நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
பள்ளி, கல்லூரிகள் மூடப்போவதில்லை. பள்ளிகளை மூடுவது குறித்து கருத்துகளைக் கேட்டுப் பெற்றுள்ளோம். 15 நாள்களில் தேர்வுகள் முடிந்தவுடன் அதுகுறித்து ஆய்வு செய்யப்படும்."
கர்நாடகத்திலும் கரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. மார்ச் தொடக்கத்தில் 300 என்ற கணக்கில் இருந்து வந்த தினசரி பாதிப்பு எண்ணிக்கை மாத இறுதியில் 3000 என்ற கணக்கில் தினசரி பாதிப்பு பதிவாகி வருகிறது.
இந்த நிலையில் கர்நாடக அரசு இவ்வாறு தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.