Type Here to Get Search Results !

வீட்டில் உள்ள பொருட்களை வைத்து நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பது எப்படி?



மஞ்சள் பாலில் இருந்து கால்சியம், மாங்கனீசு, குர்குமின், ஆன்டி ஆக்சிடண்ட், புரதம் உள்ளிட்ட சத்துக்கள் கிடைத்துவிடும். இந்த மஞ்சள்பால் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்.

ஒரு கிளாஸ் பாலுக்கு கால் டீஸ்பூன் அளவுக்கு மஞ்சள் சேர்த்து கொதிக்க விடவேண்டும். இந்த பாலை வடிகட்டி நாட்டு சர்க்கரை அல்லது கருப்பட்டி சேர்த்து சூடாக குடிக்கலாம். இந்த பாலில் ஏலக்காய், பட்டை, இஞ்சி, மிளவு போன்றவற்றையும் சேர்த்துக் கொள்ளலாம்.

மஞ்சள் பால் தான் மிகச் சிறந்ததாக இருக்கும். துளி மஞ்சள் கலந்த பாலில் பட்டை, இஞ்சி, மிளகு, நாட்டு சர்க்கரை அல்லது பனங்கற்கண்டு போட்டுக் குடித்தால் உடலுக்குத் தேவையான அத்தனை ஊட்டச்சத்தும் கிடைத்து விடும்.

சாதாரண காய்ச்சல் முதல் பல்வேறு தொற்றுநோய்கள் வருவதற்கான வாய்ப்பு குறையும். தொண்டை வலி, தொண்டைப் புண், வறட்டு இருமல் உள்ளிட்டவற்றையும் நீக்கும்.

குர்குமின் இருப்பதால் புற்றுநோய் செல்களை அழிக்கும். கீல் வாதம், முடக்குவாதம் காரணமாக உண்டாகும் வீக்கத்தைக் கட்டுப்படுத்தும். மூட்டு, முதுகுத்தண்டை வலிமைப்படுத்தும்.

மலச்சிக்கல் பிரச்சனை உள்ளவர்கள் தூங்கச் செல்வதற்கு முன்பு பாலில் இரண்டு டீஸ்பூன் நெய் கலந்து குடிக்க வேண்டும். இது செரிமான மண்டலத்தின் செயல்திறனை அதிகரிக்கச் செய்து மலச்சிக்கல் பிரச்சினையை போக்கும்.


Top Post Ad

Below Post Ad