Type Here to Get Search Results !

குடும்ப உறுப்பினருக்கு கொரோனா பாதித்தால் மத்திய அரசு ஊழியர்களுக்கு 15 நாள் விடுப்பு


'பாசிட்டிவ்’ என வந்த நாளில் இருந்து ஆஸ்பத்திரியில் 20 நாளுக்கு மேல் சிகிச்சை பெறுகிறபோது, அதற்கான ஆதார சான்று அளித்து விடுப்பு எடுத்துக்கொள்ளலாம்.

கொரோனா தொற்றின் பிடியில் நாடு சிக்கி, மெல்ல மெல்ல மீண்டு வருகிற நிலையில் இது தொடர்பாக களுக்கு விடுப்பு சலுகைகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

சார்ந்துள்ள குடும்ப உறுப்பினர்கள் அல்லது பெற்றோர் தொற்று பாதித்து, ஆஸ்பத்திரியில் சேர்க்கப்படுகிறபோது, மத்திய அரசு ஊழியர்களுக்கு 15 நாட்கள் சிறப்பு விடுப்பு வழங்கப்படும்.

அதைத் தாண்டியும் ஆஸ்பத்திரியில் சிகிச்சை தொடர்ந்தால் ஆஸ்பத்திரியில் இருந்து ‘டிஸ்சார்ஜ்’ செய்யப்படுகிற நாள் வரையில் விடுப்பு அனுமதிக்கப்படும் என்று மத்திய பணியாளர் நலன் துறை அமைச்சம் அறிவித்துள்ளது.

இது தொடர்பான உத்தரவில் கூறப்பட்டுள்ள பிற முக்கிய அம்சங்கள் வருமாறு:-
கொரோனா தொற்றால் பாதிக்கப்படுகிறபோது, வீட்டில் தனிமைப்படுத்திக்கொள்கிறபோது, பிற மையங்களில் தனிமைப்படுத்தப்படுகிறபோது 20 நாட்கள் வரையில் சிறப்பு விடுப்பு/ ஈட்டிய விடுப்பு வழங்கப்படும். இந்த விடுப்பு, கொரோனா பரிசோதனை முடிவு ‘பாசிட்டிவ்’ என வந்த நாளில் இருந்து நடைமுறையில் வரும்.

* ‘பாசிட்டிவ்’ என வந்த நாளில் இருந்து ஆஸ்பத்திரியில் 20 நாளுக்கு மேல் சிகிச்சை பெறுகிறபோது, அதற்கான ஆதார சான்று அளித்து விடுப்பு எடுத்துக்கொள்ளலாம்.

* ஒரு கொரோனா நோயாளியுடன் நேரடி தொடர்பு கொண்டதால், வீட்டில் கள் தனிமைப்படுத்திக்கொள்ளும்போது 7 நாட்கள் அவர்கள் வீட்டில் இருந்து பணியை கவனிப்பதாகவோ அல்லது பிற வேலையில் (ஓ.டி.) ஈடுபட்டிருப்பதாகவோ எடுத்துக்கொள்ளப்படும்.

* கட்டுப்பாட்டு பகுதியில் கள் இருந்து, முன் எச்சரிக்கை நடவடிக்கையாக வீட்டில் தனிமைப்படுத்திக்கொள்ளும்போது, அந்த பகுதியானது, கட்டுப்பாட்டு பகுதி அறிவிப்பில் இருந்து விலக்கப்படுகிற வரையில், வீட்டில் இருந்து பணி செய்வதாகவோ, பிற பணியில் (ஓ.டி.) ஈடுபட்டிருப்பதாகவோ கருதப்படும்.

இந்த உத்தரவுகள் அனைத்தும் கடந்த 2020-ம் ஆண்டு மார்ச் மாதம் 25-ந் தேதியில் இருந்து, அடுத்த உத்தரவு வரும் வரையில் நடைமுறையில் இருக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இது அனைத்து மத்திய அரசு ஊழியர்களுக்கும் பொருந்தும்.


Top Post Ad

Below Post Ad