Type Here to Get Search Results !

5 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு


வெப்ப சலனத்தின் காரணமாக தமிழ்நாட்டில் தேனி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை, புதுக்கோட்டை மற்றும் டெல்டா மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.தமிழ்நாட்டில் தென்மேற்குப் பருவமழை பல மாவட்டங்களில் தீவிரமடைந்துள்ள நிலையில் வெப்பச்சலனம் காரணமாகவும் மழை பெய்து வருகிறது. தமிழ்நாட்டில் இன்றும் பல ஊர்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.

சென்னை வானிலை மையம் இன்று வெளியிட்டுள்ள அறிவிப்பில், மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய நீலகிரி, கோவை ,திருப்பூர், தேனி ,திண்டுக்கல் ,தென்காசி மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. தென் மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என தெரிவித்துள்ளது. வரும் 25 மற்றும் 26 ஆம் தேதிகளில் தமிழ்நாட்டில் உள் மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ஏனைய மாவட்டங்களில் அனேகமாக வறண்ட வானிலையே நிலவும் என வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. 27ஆம் தேதி கடலோர மாவட்டங்கள் ஒரு மாவட்டங்கள் மற்றும் புதுவை பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

சென்னையை பொருத்தவரை அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் நகரின் ஒரு சில இடங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும் எனவும், அதிகபட்ச வெப்பநிலை 38 மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 28 டிகிரி செல்சியஸ் ஒட்டி இருக்கும் என்றும் அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.இன்று முதல் வருகிற 27-ஆம் தேதி வரை தென் மேற்கு மற்றும் மத்திய மேற்கு அரபிக் கடல் பகுதிகளில் பலத்த காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்திலும் , அவ்வப்போது 60 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக் கூடும் என்பதால் மேற்கூறிய தேதிகளில் மீனவர்கள் யாரும் கடலுக்கு செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.,

Top Post Ad

Below Post Ad