தமிழ்நாட்டில் தளர்வுகளுடன் ஊரடங்கை மேலும் ஒருவாரம் நீட்டிக்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம், உயரதிகாரிகள் பரிந்துரைத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

வரும் 14ம் தேதி காலை 6 மணியுடன் ஊரடங்கு முடிவடையவுள்ள நிலையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று காலை தலைமைச் செயலகத்தில் ஆலோசனைக்கூட்டம் நடைபெற்றது.

இந்த கூட்டத்தில், மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன், தலைமைச்செயலாளர் இறையன்பு, காவல்துறை தலைவர் திரிபாதி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

அப்போது தளர்வுகளுடன் ஊரடங்கை மேலும் ஒரு வாரம் நீட்டிக்க அதிகாரிகள் பரிந்துரைத்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளது. தொற்று குறைந்த மாவட்டங்களில் அதிகாலை நடைபயிற்சிக்கு அனுமதி அளிக்கவும், டாஸ்மாக் கடைகளை திறக்கவும் பரிந்துரைக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது.

அதேநேரத்தில், தொற்று அதிகமுள்ள 11 மாவட்டங்களில் தளர்வுகள் வேண்டாம் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் பரிந்துரைக்கப்பட்டதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.Post a Comment

Previous Post Next Post