விண்வெளியில் லட்சக் கணக்கான விண்கற்கள் சுற்றி வருகின்றன. இதுவரை 11 லட்சம் விண்கற்கள் சுற்றி வருவதை கண்டுபிடித்துள்ளனர்.

இந்த கற்கள் பெரிய பாறாங்கல் அளவில் இருந்து சிறிய மலை குன்று அளவு வரை இருக்கின்றன. இந்த கற்கள் அடிக்கடி பூமி அருகே கடந்து செல்வது வழக்கம்.
அவற்றில் சில கற்கள் பூமி மீதும் விழுந்துள்ளன. ஆனால் பெரும்பாலான கற்கள் வளிமண்டலத்தில் வெடித்து பூமிக்கு வரும் போது காற்று உராய்வு ஏற்பட்டு தீ பிடித்து விடும். எனவே பூமிக்குள் வருவதற்குள் அது எரிந்து சாம்பலாகி விடுவது உண்டு. அதையும் மீறி முழுமையாக எரியாமல் பூமியில் விழும் கற்களும் உண்டு.

இரவு நேரத்தில் வானத்தில் திடீரென எதோ ஒரு பொருள் தீபிடித்து எரிந்து கொண்டு பாய்ந்து செல்வதை பார்க்கலாம். விண்கற்கள் எரிவதுதான் இப்படி நமக்கு தென்படும்.
இந்த நிலையில் ராட்சத பாறாங்கள் ஒன்று பூமியை நோக்கி வந்து கொண்டு இருக்கிறது. அது ஒரு விளையாட்டு மைதானம் அளவிற்கு பெரிதாக உள்ளது.
அந்த கல்லுக்கு 2008 ஜி.ஓ. 20 என்று பெயரிட்டுள்ளனர். அது வருகிற 24-ந் தேதி பூமிக்கு அருகில் வரும்.
ஆனாலும் இதனால் பூமிக்கு எந்தவித ஆபத்தும் ஏற்படாது என விஞ்ஞானிகள் கருதுகின்றனர்.

 அது பூமியில் இருந்து 59 லட்சத்து 38 ஆயிரம் கிலோ மீட்டர் தூரத்தில் கடந்து செல்கிறது.
எனவே புவி ஈர்ப்பு விசைக்குள் அது வராது. இதனால் பூமிக்கு எந்த ஆபத்தும் ஏற்பட வாய்ப்பில்லை என்று விஞ்ஞானிகள் கருதுகின்றனர்.

Source Maalaimalar

Post a Comment

Previous Post Next Post