திடீரென சைக்கிளில் வந்த ஸ்டாலின், மகிழ்ந்து போன சென்னைவாசிகள்.

ஞாயிறு காலை வழக்கமாக ஈசிஆர் சாலையில் வாக்கிங் போகிறவர்கள் ஆச்சர்யத்துடன் பார்த்து மகிழ்ச்சி அடைந்தார்கள்.

ஞாயிற்றுகிழமையான இன்று கிழக்கு கடற்கரை சாலையில் திடீரென சைக்கிளில் சாதாரணமாக சென்று கொண்டிருந்தார் முதல்வர் ஸ்டாலின். அவரைச் சுற்றி சிலர் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார்கள். இந்தக் காட்சியை பொதுமக்கள், மற்றும் நடைபயிற்சி சென்று பலர் இன்ப அதிர்ச்சி அடைந்தனர். நேராக முதல்வரை தேடிச் சென்று பேசித் தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். அத்துடன் செல்பியும் எடுத்துக் கொண்டனர்,


முதல்வர் ஸ்டாலின் தொடர்ந்து சைக்கிளில் சென்றபடியே இருந்தார். வயதான பெண்மணியைப் பார்த்து சைக்கிளில் நிறுத்தி விட்டு இறங்கிப் போய் பேசினார். அவரை நலம் விசாரித்து விட்டு அங்கிருந்து பொதுமக்களிடம் சிறிது நேரம் பேசி விட்டு அங்கிருந்து புறப்பட்டுச் சென்றார்.


சிவப்பு கலர் சட்டையில் ஹெல்மட் அணிந்தபடி செல்வது முதல்வர் தான் என்பது தெரிந்து காரில் சென்ற பலரும் கார்களை மெதுவாக ஓட்டியபடி முதல்வரைப் பார்த்து கையை அசைத்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். ஸ்டாலினின் வருகையால் கிழக்கு கடற்கரை சாலை பரபரப்பாகக் காணப்பட்டது.

Post a Comment

أحدث أقدم