தேசிய ஊரக நலத்திட்டத்தின் கீழ் தமிழகம் முழுவதும்  செயல்பட்டு வரும் தமிழ்நாடு அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் காலியாக உள்ள மருந்து வழங்குபவர் பணியிடங்களை தற்காலிக அடிப்படையில் நிரப்புவதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடம் இருந்து வரும் 25 ஆம் தேதிக்குள் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 

பணி: மருந்து வழங்குபவர் (Dispenser) 

காலியிடங்கள்: 420 

வயதுவரம்பு: 18 முதல் 57 வயதிற்குள் இருக்க வேண்டும். 

சம்பளம்: தினமும் ரூ.750 வழங்கப்படும். வாரத்தில் 6 நாள்கள் என தினமும் 6 மணி நேரம் வேலை என அறிவிக்கப்பட்டுள்ளது. 

தேர்வு செய்யப்படும் முறை: மெரிட் அடிப்படையில் தேர்வு செய்யப்படுவர். தேர்வு செய்யப்படுவர்கள் தமிழகத்தில் உள்ள எந்த ஆரம்ப சுகாதார நிலையங்களிலும் பணியமர்த்தப்படுவார்கள். 

தகுதி:  மருந்தக துறையில் சித்த, யுனானி, ஆயுர்வேதா,ஹோமியோபதி பிரிவில் டிஸ்பென்சரி டிப்ளமோ முடித்திருக்க வேண்டும். 

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை “Director of Indian Medicine and Homoeopathy, Arumbakkam, Chennai -106 என்ற அஞ்சல் முகவரிக்கு அனுப்ப வேண்டும். 

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி: 25.08.2022

மேலும் விவரங்கள் அறிய www.tnhealth.tn.gov.in  அல்லது என்ற லிங்கை கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும். 

Post a Comment

Previous Post Next Post