Type Here to Get Search Results !

தினம் ஒரு குட்டிக்கதை பால.ரமேஷ்.




ஒரு அதிகாலைப்பொழுது! கணவன் மனைவியை எழுப்பி கேட்டான்.

"டியர்... யோகா பண்ணப்போறேன்... நீயும் வர்றியா?"

கணவனை வித்தியாசமாக பார்த்த அந்த மனைவி, "ஓ... அப்படின்னா நான் fat-ஆ இருக்கேன்! உடம்பை குறைன்னு சொல்றீங்க?" என்றாள்.

கணவன்: "அதுக்கில்லைம்மா! யோகா பண்றது ஹெல்த்துக்கு நல்லது!"

மனைவி: "அப்போ என்னை sick-ன்னு சொல்றீங்களா?"

கணவன்: "இல்லை இல்லை! நீ வரவேணாம். விடு!"

மனைவி: "அப்ப என்னை சோம்பேறின்னு நினைக்கிறீங்க!"

கணவன்: "ஐயோ இல்லை! ஏன் எல்லாத்தையும் தப்பாவே புரிஞ்சுக்கிற?"

மனைவி: "இவ்வளவு நாளா புரிஞ்சுக்காம தான் இருந்தேனா?"

கணவன்: "மறுபடி பாரு.. நான் அப்படி சொல்லலை!"

மனைவி: அப்படிதான் சொன்னீங்க! அப்ப என்ன நான் பொய் சொல்றேனா?"

கணவன்: "தயவு செஞ்சு விடு! காலங்காத்தால ஏன் சண்டை?"

மனைவி: "ஆமாங்க... நான் சண்டைக்காரிதான்!"

கணவன்: "Ok! நானும் போகலை. போதுமா?"

மனைவி: "உங்களுக்கு போக அலுப்பு! அதுக்கு என்னை blame பண்றீங்க!"

கணவன்: "சரி, நீ தூங்கு! நான் தனியா போய்க்கிறேன்! சந்தோஷமா?"

மனைவி: "அதானே... உங்களுக்கு எங்க போனாலும் தனியா போய் enjoy பண்ணனும்! அதுக்குதானே இவ்வளவும் பேசுனீங்க?"

வெறுத்துப்போன கணவன் எவ்வளவு யோசித்தும், தான் என்ன தவறு செய்தோம் என்று விளங்கவே இல்லை!

டயர்டாகி படுத்துவிட்டான்.

இதுபோல எத்தனை வீடுகளோ!

Top Post Ad

Below Post Ad