Type Here to Get Search Results !

புனித வெள்ளியின் வரலாற்று பின்னணி மற்றும் அதன் முக்கியத்துவம்


புனித வெள்ளியின் வரலாற்று பின்னணி மற்றும் அதன் முக்கியத்துவம்!

ஆங்கிலத்தில் குட் ஃப்ரைடே (Good Friday) என்று அழைக்கப்படும் பதத்திற்கு தமிழில் புனித வெள்ளி அல்லது அமைதியான வெள்ளி என்று பொருள்.

ஒவ்வொரு ஆண்டும் கிறிஸ்தவ சமய மக்களால் புனித வெள்ளியானது மிகவும் அமைதியாக அனுசாிக்கப்படுகிறது. 

புனித வெள்ளி அன்று அரசு விடுமுறை அளிக்கப்பட்டிருக்கிறது.

ரோமை ஆட்சியாளா்களால் கொல்கத்தா என்று அழைக்கப்பட்ட கல்வாாி மலையில் இயேசு கிறிஸ்து மிகக் கொடூரமாக சிலுவையில் ஆணிகளால் அறையப்பட்டு கொலை செய்யப்பட்டதை கிறிஸ்தவ மக்கள் புனித வெள்ளி அன்று நினைவு கூா்ந்து அனுசாிக்கின்றனா்.

 இயேசு கிறிஸ்து எவ்வாறு ரோமையா்களால் சிலுவையில் அறையப்பட்டாா் என்பதை கிறிஸ்தவா்களின் புனித நூலான பைபிள் மிகத் தெளிவாக விவாிக்கிறது.

கிறிஸ்தவ மக்களுக்கு புனித வெள்ளி என்பது ஒரு முக்கியமான புனிதமான நாள் ஆகும். 

இயேசு இறப்பதற்கு முந்தின வாரம் புனித வாரம் அல்லது ஈஸ்டா் வாரம் என்று அழைக்கப்படுகிறது. 

அந்த புனித வாரத்தில் வரும் வெள்ளிககிழமை புனித வெள்ளி என்று அழைக்கப்படுகிறது.

 ஒவ்வொரு ஆண்டும் இயேசு இறப்பதற்கு முந்தின வாரத்தை புனித வாரமாக கிறிஸ்தவ மக்கள் அனுசாிக்கின்றனா்.

Top Post Ad

Below Post Ad