Type Here to Get Search Results !

Weight Loss Tips: மெட்டபாலிஸத்தை அதிகரிக்கணுமா... நல்லா காரசாரமா சாப்பிடுங்க...!

உடல் பருமன் குறைய பல விதமான முயற்சிகள் மேற்கொண்ட போதிலும் உங்கள் முயற்சி வெற்றி அடையாமல் போகலாம். பல காரணிகள் உங்கள் எடை இழப்பு முயற்சியை பாதிக்கலாம். உங்கள் உணவு மற்றும் உடல் பயிற்சிகள் தவிர, உங்கள் வளர்சிதை மாற்றம் முக்கிய பங்கு வகிக்கிறது. வேகமான வளர்சிதை மாற்றம் உடல் எடையை எளிதில் குறைக்க உதவுகிறது. ஏனெனில் வலர்சித மாற்றம் சிறப்பாக இருந்தா ஓய்வில் கூட கலோரிகளை எரிக்க உதவுகிறது. மறுபுறம், மெதுவான வளர்சிதை மாற்றம் உள்ளவர்கள் சிறிது எடையைக் குறைக்க கூட போராட வேண்டி இருக்கலாம்.

இருப்பினும், சில எளிய முறைகள் மூலம் உங்கள் வளர்சிதை மாற்றத்தை எளிதாக அதிகரிக்கலாம். தண்ணீர் குடிப்பது முதல் எடை தூக்குவது வரை, உங்கள் வளர்சிதை மாற்றத்தை விரைவுபடுத்த உதவும் பல முறைகள் உள்ளன. அதில், உணவுமுறையும் முக்கியப் பங்கு வகிக்கிறது. ஒருவரின் வளர்சிதை மாற்றத்தை மேம்படுத்துவதற்கு பல உணவுகள் குறிப்பாக அறியப்படுகின்றன.

இன்ஸ்டாகிராம் பதிவு ஒன்றில், ஊட்டச்சத்து நிபுணர் என்மாமி அகர்வால் நமது வளர்சிதை மாற்றத்தை அதிகரிக்க உதவும் ஒரு உதவிக்குறிப்பைப் பகிர்ந்துள்ளார். காரமான உணவுகளை சாப்பிடுவது சிறந்த எடை இழப்புக்கு நீங்கள் பயன்படுத்தக்கூடிய தந்திரங்களில் ஒன்றாகும் எனவும் காரமான உணவுகள் வளர்சிதை மாற்றத்தை தூண்டுகின்றன என்ற தகவலை அவர் பகிர்ந்து கொள்கிறார். காரமான உணவுகளில் குறிப்பாக மிளகாயில் காணப்படும் கேப்சைசின் என்ற கலவை வளர்சிதை மாற்றத்தை அதிகரித்து எடையை குறைக்க உதவுகிறது.

ஊட்டச்சத்து நிபுணர் என்மாமி மேலும் கூறுகையில், "உண்ணும் போது, காரமான உணவுகள் தற்காலிகமாக இதயத் துடிப்பை அதிகரிக்கலாம். வளர்சிதை மாற்ற விகிதமும் அதிகரிக்கும். இருப்பினும், ஒப்பீட்டளவில் தனிநபர்களின் உடல் தனமை பொறுத்து இந்த அளவு மாறுபடும் என்பதைக் கவனத்தில் கொள்ள வேண்டியது அவசியம்" என்கிறார்.

உடல் பருமனை குறைக்க செய்யவேண்டியவை

வளர்சிதை மாற்றத்தை அதிகரிப்பது என்பது கடினமானது அல்ல, நீங்கள் அதில் யோசித்து உணவு வகைகளை உண்டு, உடல் பயிற்சிகளை செய்தால் அது எளிது.காரமான உணவுகள் வளர்சிதை மாற்றத்தை அதிகரிக்கும் என்று கூறிய ஊட்டச்சத்து நிபுணர், எனினும் சிறந்த எடை இழப்பு முடிவுகளுக்கு, ஊட்டசத்து மிக்க உணவு, வழக்கமான உடற்பயிற்சி மற்றும் பிற ஆரோக்கியமான வாழ்க்கை முறை பழக்கவழக்கங்களுடன் எளிதாகும் என்கிறார்.

வளர்சிதை மாற்றத்தை அதிகரிக்க சில டிப்ஸ்

1. சிறந்த வளர்சிதை மாற்றத்திற்கு போதுமான அளவு புரதத்தை சாப்பிடுங்கள்

2. நீங்கள் நாள் முழுவதும் போதுமான தண்ணீர் குடிக்க வேண்டும்

3. உடல் பயிற்சி செய்வது உடல் எடையைக் குறைக்கவும், வளர்சிதை மாற்றத்தை மேம்படுத்தவும் உதவும்

4. உங்கள் உடற்பயிற்சிகளின் தீவிரத்தை அதிகரிக்க முயற்சிக்கவும்

5. நல்ல தூக்கத்தைப் பெறுவதும் விரைவான வளர்சிதை மாற்றத்திற்கான வழிகளில் ஒன்றாகும். எனவே ஒவ்வொரு இரவும் குறைந்தது 8 மணிநேரம் தூங்குங்கள்.

6. இரவு உணவைத் தவிர்ப்பது உங்கள் உடல் பருமன் குறையும் என்று பெரும்பாலான மக்கள் நினைக்கிறார்கள். ஆனால் உணவுகளை தவிர்ப்பதன் மூலம், உங்கள் உடலை பட்டினி கிடக்கிறது. எனவே அது கூடுதல் கலோரிகளை எரிப்பதற்குப் பதிலாக கலோரிகளை தக்க வைத்திருக்கும்.

Top Post Ad

Below Post Ad