Type Here to Get Search Results !

தமிழகத்தில் ஏப்ரல் 18ஆம் தேதி ஒரே கட்டமாக மக்களவைத் தேர்தல்! தேர்தல் ஆணையம் அறிவிப்பு


நாடாளுமன்றத் தேர்தல் 7 கட்டங்களாக நடைபெறவுள்ளன.

மார்ச் 18-ல் வேட்பு மனுதாக்கல். மார்ச் 25-ல் முடிவு.

வேட்புமனு திரும்பப் பெற கடைசி நாள் : மார்ச் 28

தேர்தல் தேதிகள் :  ஏப்ரல் 11, ஏப்ரல் 18,  ஏப்ரல் 23, ஏப்ரல் 29, மே 6, மே 12, மே 19

 

*17 ஆவது பாராளுமன்ற தேர்தல் வாக்குப்பதிவு  தமிழ்நாட்டில் 18-04-2019 அன்று நடைபெறும்.


-இந்திய தேர்தல் ஆணையம் அறிவிப்பு.


முன்னதாக முதல் கட்டத்திலேயே ஏப்ரல் 11ஆம் தேதி தமிழகத்தில் தேர்தல் நடைபெறும் என தவறாக ஊடகங்களில் வெளியாகியது குறிப்பிடத்தக்கது‌



*முதல் கட்ட தேர்தல் - 20 மாநிலங்களில் உள்ள 91 தொகுதிகள்*


*2 -ம் கட்ட தேர்தல் -13 மாநிலங்களில் உள்ள  97 தொகுதிகள்*


*3 -ம் கட்ட தேர்தல் -14 மாநிலங்களில் உள்ள 115 தொகுதிகள்*


*4 -ம் கட்ட தேர்தல் - 9 மாநிலங்களில் உள்ள  71 தொகுதிகள்  தேர்தல் நடத்தப்படும்.*



மக்களவைத் தேர்தலை முன்னிட்டு ஏப்ரல் 17,18 (புதன், வியாழன்) தேதிகள் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்க வாய்ப்பு!


மக்களவைத் தேர்தல் 7 கட்டங்களாக நடைபெறும் என்று இந்தியத் தலைமைத் தேர்தல் ஆணையர் சுனில் அரோரா அறிவித்துள்ளார். தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி மாநிலங்களுக்கு ஏப்ரல் 18-ம் தேதி முதல் கட்டத் தேர்தல் நடைபெறும் என்று அறிவித்துள்ளார். தேர்தல் முடிவுகள் மே 23-ம் தேதி வெளியாகும்.


மக்களவைத் தேர்தல் தேதி அறிவிப்பு எப்போதும் வரும் என்ற எதிர்பார்ப்பு நாடு முழுவதும் நிலவி வந்தது. இந்தநிலையில், இந்தியத் தலைமைத் தேர்தல் ஆணையர் சுனில் அரோரா டெல்லியில் செய்தியாளர்கள் முன்னிலையில் தேர்தல் தேதி, மற்றும் தேர்தல் நடைமுறைகளை அறிவித்தார். அதன்படி, ’நாடு முழுவதும் ஏழு கட்டங்களாகத் மக்களவைத் தேர்தல் நடைபெறும். தமிழகத்துக்கு ஒரே கட்டமாக ஏப்ரல் 18-ம் தேதி தேர்தல் நடைபெறும்.மார்ச் 19-ம் தேதி முதல் வேட்பு மனுத் தாக்கல் செய்யலாம். வேட்பு மனுத்தாக்கல் செய்ய கடைசி நாள் மார்ச் 26-ம் தேதி என்று அறிவிக்கப்பட்டுள்ளது. வேட்பு மனு பரிசீலனை மார்ச் 27-ம் தேதி நடைபெறும். வேட்பு மனுவை மார்ச் 29-ம் தேதிக்குள் திரும்பப் பெறவேண்டும். நாடு முழுவதும் வாக்கு எண்ணிக்கை மே மாதம் 23-ம் தேதி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் 21 தொகுதிகளுக்கான இடைத்தேர்தலும் ஏப்ரல் 18-ம் தேதியே நடைபெறும்’என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


Top Post Ad

Below Post Ad