Type Here to Get Search Results !

தபால் வாக்கு போட போறீங்களா? கண்டிப்பா இதை படிச்சிட்டு போங்க




அவசியம் இறுதி வரை படியுங்கள்.

அன்பார்ந்த ஆசிரியர் மற்றும் அரசு ஊழியர் பெருமக்களே!

*31.03.2019 முதல் பயிற்சி வகுப்பில் அனைவருக்கும் படிவம் - 12  தேர்தல் நடத்தும் அலுவலரால் வழங்கப்பட்டது

அதைப் போன்று முழுமையாக  நிரப்பப்பட்டு  இணைப்புகளையும் சரியாக இணைத்து கொடுத்தவர்களுக்கு

*ஓர் இனிப்பான மகிழ்ச்சியான செய்தி

நீங்கள்தான் 2019 பாராளுமன்ற தேர்தலில் முதல் வாக்கை செலுத்திய பெருமைக்குரியவர்கள்.

*ஆம்.*

எதிர்வரும் ஞாயிறு 07.04.2019 ல் நடைபெறப்போகும் *இரண்டாவது பயிற்சி வகுப்பில் உங்கள் இருக்கை தேடி தபால் வாக்கு வரப்போகிறது*.

நான்தான் *முதலில் வாக்களித்தேன்* என்ற திமிரோடும் செருக்கோடும் நெஞ்சுரத்தோடும் தேர்தல் பணியாற்ற செல்லலாம்.


கவனமாக படிக்கவும்

அஞ்சல் வாக்கு செலுத்தும் விதம் - விளக்கம்- கவனிக்க!

*01.🌹முதலில் உறுதி மொழி படிவத்தில் (declaration Form) 13A ல் முன்,பின் என  இரண்டு பக்கங்கள் இருக்கும்.



* முன்புறம் மட்டும் மேல்பகுதியில் வாக்கு சீட்டு எண்ணை (Ballot paper no) எழுதி கையெழுத்திட வேண்டும்

*கீழ்பகுதியில் உறுதிமொழி படிவத்தில் மேலொப்பம் இட   (attestation) ஒவ்வொரு பயிற்சி வகுப்பிலும் இரண்டு தாசில்தார்கள் சீலுடன் ரெடியாக இருப்பார்கள்.

*இரண்டாவதாக வாக்கு சீட்டு உள்ள கவர் படிவம் - 13 B வாக்குசீட்டு (Ballot Paper) மடித்து வைக்கப்பட்டு  இருக்கும்.

*அதன் கவர்மீது (Postal Ballot Paper cover 13 - B) வாக்கு சீட்டு எண் குறிப்பிட வேண்டும்.

நமது நெல்லை மாவட்டத்தை பொறுத்தவரை கவர்மீது வாக்கு சீட்டு எண்ணை அவர்களே குறிப்பிட்டு உள்ளார்கள்.

தேர்தல் நடத்தும் அலுவலர்களுக்கு மிக்க நன்றி.

*மிக மிக கவனம்.

வாக்கு சீட்டில் பந்துமுனைப் பேனாவால் நீங்கள் விரும்பும் வேட்பாளருக்கு நேரில் அந்த கட்டத்திற்குள் மட்டும் இருக்கும்படி ஒரே ஒரு டிக் √ அடிக்கவும்.

மை பேனாவால் டிக் அடித்து பின்பு மடிக்கும் போது ஒருவேளை மற்றோரு சின்னத்திலோ அல்லது மற்றொரு வேட்பாளருக்கு எதிராகவோ மை கசிந்து விட்டால் அது செல்லாத ஓட்டாகிவிடும்.



எனவே டிக் √ குறியீட்டை மிக கவனமாக அடியுங்கள்.Over writing வேண்டாம்.

சின்னத்தில் ஒரு டிக்,வேட்பாளர் பெயரில் ஒரு டிக் என *இரண்டு டிக் அடித்து விடாதீர்கள். 

பின்பு வாக்குசீட்டை தேர்தல் அலுவலர் எவ்வாறு மடித்து வைத்துள்ளாரோ அவ்வாறே மடித்து உள்ளே வைத்து கவரை ஒட்டி விடவும்.

*03.🌹அடுத்து படிவம் -  13 C.இது ஒரு கவர்.
இதில் படிவம் 13A (உறுதிமொழி படிவம்) மற்றும் 13 -B வாக்குசீட்டை வைத்து ஒட்டப்பட்ட கவர் இரண்டையும்  (Ballot paper உள்ளகவர்)  இந்த 13 -C கவரினுள் வைத்து ஒட்ட வேண்டும்.

இந்த *கவரின் மீது இடது பக்க ஓரத்தில் signature of the sender என இருக்கும். இதன் மீதும் கண்டிப்பாக கையெழுத்து இடவேண்டும்.

இல்லை என்றால் நமது ஓட்டு கவரினை பிரித்து பார்க்காமல் அப்படியே தூர வைத்து விடுவார்கள்.

நமது வாக்கு செல்லாத வாக்காகிவிடும்.

*04🌹நிறைவாக படிவம் 13 -D.இது வாக்காளருக்கான வாக்களிக்க உதவும் வழிகாட்டி குறிப்பு.(Information letter)

இந்த படிவத்தின் இறுதியில் இரண்டு கோடுகள் இருக்கும்.
*அதில் 08 am on 23.05.2019 என எழுத வேண்டும்.

நமது நெல்லை மாவட்டத்தை பொறுத்தவரை படிவம் *13 D யில் அவர்களே பூர்த்தி செய்து உள்ளனர்.

குறிப்பு: ஒரு தேர்தல் பயிற்சி வகுப்பில் இரண்டு தாசில்தார்கள் Attest பண்ண சீலுடன் இருப்பார்கள்.



*நாம் வரிசையில் நின்று பொறுமையாக வாக்களிக்க வேண்டும்.


Top Post Ad

Below Post Ad