Type Here to Get Search Results !

நோட் பண்ணிக்கோங்க... 4 முறைக்கு மேல் பணம் எடுத்தால் ரூ. 150 கட்டணம்! வங்கிகளின் அறிவிப்பு








HDFC ATM withdrawal limit : வங்கிக்கணக்கில் இருந்து 4 முறை இலவச பணப் பரிவர்த்தனைக்குப் பிறகு பணம் எடுத்தாலோ, டெபாசிட் செய்தாலோ ரூ.150 கட்டணம் வசூலிக்கப்படும் என்று தனியார் வங்கிகள் அறிவித்துள்ளன, நம்முடைய பணத்தை போடவோ, எடுக்கவோ கூட பணம் கொடுக்க வேண்டியிருக்கிறது. இந்த பணத்தை வங்கிகள் எப்படி வசூலிக்கிறார்கள் என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.

ஹெச்டிஎப்சி வங்கி

ஹெச்டிஎப்சி வங்கியில் 4 முறை இலவசமாக பணம் எடுக்கவோ, டெபாசிட்டோ செய்யலாம். வாடிக்கையாளர் கணக்கு வைத்துள்ள வங்கிக்கிளைகளில் 2 லட்சம் வரை மட்டுமே டெபாசிட் செய்யலாம், எடுக்கலாம். அதற்கு மேல் போனால் கட்டணம் வசூலிக்கப்படும் என அறிவித்துள்ளது.

இந்த கட்டண வசூல் அனைத்து வகையான கணக்குகளுக்கும் பொருந்தும் என அந்த வங்கி அறிவித்துள்ளது. கணக்குகளில் பணத்தை சராசரி இருப்பாக தொடர்ச்சியாக வைத்துள்ளவர்களுக்கு விதி விலக்காக 6 வது முறையில் இருந்து 100 ரூபாய் வசூலிக்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது.

ஐசிஐசிஐ வங்கி

ஐசிஐசிஐ வங்கியைப் பொறுத்தமட்டில், கட்டண வசூலிப்பு நடைமுறை பின்பற்றப்படுகிறது. தேவைப்பட்டால், கட்டணம் அதிகரிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மிகவும் குறைந்தபட்ச இருப்புத் தொகை கொண்ட சேமிப்பு கணக்குகள், மாதத்துக்கு 4 முறை இலவசமாக பணத்தை திரும்ப எடுத்துக் கொள்ளலாம் டெபாசிட் செய்யலாம்.

இத்தனை நாள விடுங்க.. இனியாச்சி தெரிஞ்சிகோங்க எஸ்பிஐ-யில் இத்தனை திட்டங்கள் உங்களுக்காகவே இருக்கு!

ஆச்சிஸ் வங்கி

ஆக்சிஸ் வங்கியைப் பொறுத்தவரை மாதத்துக்கு முதல் 4 ரொக்கப் பரிவர்த்தனைகள் இலவசமாகும். அதன்பிறகு ஆயிரம் ரூபாய்க்கு ரூ.5 அல்லது ரூ.150ல், எந்தத் தொகை அதிகமாக உள்ளதோ அந்தத் தொகை பிடித்தம் செய்யப்படும். மற்றவரின் கணக்குக்கு பணம் அனுப்புவதற்கான உச்ச வரம்பு ஒரு நாளைக்கு ரூ.50,000 எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Top Post Ad

Below Post Ad