உள்ளாட்சித் தேர்தல் தொடர்பான வழக்கில் தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் பிரமாணப்பத்திரம் தாக்கல் செய்துள்ளது.
தமிழக அரசு தாக்கல் செய்த பிரமாணப்பத்திரத்தில், வாக்காளர் பட்டியலை சரிபார்க்க வேண்டியுள்ளதால், தற்போதைக்கு உள்ளாட்சித் தேர்தலை நடத்த முடியாது என்றும் மக்களவைத் தேர்தல் நடைபெறுவதால், இந்திய தேர்தல் ஆணையத்திடமிருந்து வாக்காளர் பட்டியலை மாநில தேர்தல் ஆணையம் பெறவில்லை எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.