Type Here to Get Search Results !

சென்னை மெட்ரோவில் 40 ஆயிரம் சம்பளத்தில் வேலை !



சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தில், பொறியியல் பட்டதாரிகளுக்கு ஊக்கதொகையுடன் கூடிய சென்னை ஐஐடியில் ஒரு வருட சான்றிதழ் படிப்பும் அத்துடன் அந்நிறுவனத்தில் 5 வருடம் பணிபுரிவதற்கான வேலைவாய்ப்பு குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.

இதற்கு விண்ணப்பிக்க விரும்பும் இன்ஜினியரிங் முடித்த பட்டதாரிகள், நாளை முதல் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.

*சான்றிதழ் படிப்பு:*

PG Diploma Course - Metro Rail Technology and Management

*காலியிடங்கள்:*

சிவில் - 16
மெக்கானிக்கல் - 1
எலக்ட்ரிக்கல் - 5
எலக்ட்ரானிக்ஸ் - 3

மொத்தம்= 25 காலியிடங்கள்

*முக்கிய தேதிகள்:*

ஆன்லைனில் விண்ணப்பிக்க தொடங்கும் நாள்: 30.05.2019

ஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி நாள்: 18.06.2019

சான்றிதழ் படிப்பு தொடங்கும் காலம்: ஜூலை - 2019

*வயது வரம்பு:*

29.05.2019 அன்றுக்குள், அதிகபட்சமாக 28 வயதுடையவராக இருத்தல் வேண்டும்.

*விண்ணப்பக் கட்டணம்:*

பொது / ஓபிசி பிரிவினர் - ரூ.500

எஸ்.சி / எஸ்.டி பிரிவினர் - ரூ.100

*குறிப்பு:*

ஆன்லைனில் மட்டுமே விண்ணப்பக் கட்டணம் செலுத்த முடியும்.

*கல்வித்தகுதி:*

அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனத்தில், பொறியியல் பட்டப்படிப்பில் சிவில் / மெக்கானிக்கல் / எலக்ட்ரிக்கல் / எலக்ட்ரிக்கல் & எலக்ட்ரானிக்ஸ் / எலக்ட்ரானிக்ஸ் & கம்யூனிகேசன் இன்ஜினியரிங் போன்ற ஏதேனும் ஒரு துறையில் பயின்று முதல் வகுப்பில் தேர்ச்சி அதாவது குறைந்தபட்சமாக 70% மதிப்பெண்களில் தேர்ச்சி பெற்றிருத்தல் வேண்டும். 

*முக்கிய குறிப்புகள்:*

1. விண்ணப்பதாரர்கள் கேட் (GATE) தேர்வில்  தகுந்த மதிப்பெண்கள் பெற்றிருத்தல் அவசியம்.

2. கடைசி வருடம் பொறியியல் பயிலும் மாணவர்களும் இதற்கு விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.

*விண்ணப்பிக்கும் முறை:*

ஆன்லைனில், https://chennaimetrorail.org/ - என்ற இணையதள முகவரியில் சென்றும் விண்ணப்பிக்கலாம்.

*தேர்வு செய்யும் முறை:*

1. கேட் (GATE) தேர்வு மதிப்பெண்கள் அடிப்படையில் விண்ணப்பதாரர்கள் தேர்வு செய்யப்படுவர்.

2. மருத்துவத் தகுதி தேர்வு

சான்றிதழ் படிப்பிற்கான காலம்: ஒரு வருடம்

*சலுகைகள்:*

1. தேர்வு செய்யப்படுவோர்க்கு, மாத ஊக்கத்தொகையாக ரூ.20,000, நல்கையுடன்கூடிய
கல்விக்கட்டணமும் வழங்கப்படும்.

2. சான்றிதழ் படிப்பில் சேர வருவதற்கான பயணக்கட்டணமும் வழங்கப்படும்.

3. வெற்றிகரமாக சான்றிதழ் படிப்பு முடித்த தேர்வர்கள், குறைந்தபட்சம் 85% அல்லது அதற்கு மேல் பெற்று தேர்ச்சி பெற வேண்டும். அவ்வாறு தேர்ச்சி பெற்றவர்களுக்கு சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தில் அசிஸ்டெண்ட் மேனேஜர் பணியுடன் ரூ.40,000 மாதச் சம்பளமும் வழங்கப்படும்.

மேலும், இது குறித்த முழுத் தகவல்களைப் பெற, https://chennaimetrorail.org/wp-content/uploads/2015/11/CMRL-HR-03-2019.pdf - என்ற இணையதள முகவரியில்
சென்று அறிந்து கொள்ளலாம்.


Top Post Ad

Below Post Ad