அருப்புக்கோட்டையில் எச்டிஎஃப்சி வங்கி ஏடிஎம் மையத்தில் தீ விபத்து ஏற்பட்டது. ஏடிஎம் மையத்தில் 7 லட்சம் ரூபாய் இருந்ததாக கூறப்படுகிறது.உடனடியாக தீயணைப்பு வாகனத்துடன் சம்பவ இடத்துக்கு வந்த அருப்புக்கோட்டை தீயணைப்புத் துறையினர் தண்ணீரை பீய்ச்சியடித்து தீயை அணைத்தனர். பணம் எரிந்து சாம்பலானது.