Type Here to Get Search Results !

வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பணிவாய்ப்பு : அழைக்கிறது பணியாளர் தேர்வாணையம்


தமிழ்நாடு வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை அலுவலகத்தில் காலியாக உள்ள உதவி பயிற்சி அலுவலர்கள் பதவிக்காக தகுதியான விண்ணப்பதாரர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.





மொத்த பணியிடங்கள் -13
உதவி பயிற்சி அலுவலர் -12
( English stenographer) 01
உதவி பயிற்சி அலுவலர் ( தலைமைச்செயலக பணி) -01





வயதுவரம்பு : பொதுப்பிரிவினருக்கு 35 வயது. தாழ்த்தப்பட்ட, பழங்குடியினர் பிரிவினருக்கு வயதுவரம்பு இல்லை.





கல்வித்தகுதி :
உதவி பயிற்சி அலுவலர் ( English stenographer) - 10ம் வகுப்பு அல்லது 12ம் வகுப்பில் தேர்ச்சி.
தட்டச்சு (தமிழ் மற்றும் ஆங்கிலம்) சீனியர் பிரிவில் தேர்ச்சி 
சுருக்கெழுத்து (தமிழ் மற்றும் ஆங்கிலம்) சீனியர் பிரிவில் தேர்ச்சி 
உதவி பயிற்சி அலுவலர் ( தலைமைச்செயலக பணி) 
வணிக நடைமுறையில் டிப்ளமோ மற்றும் சுருக்கெழுத்து கூடுதல் தகுதி.





சம்பளம் : மாதம் ஒன்றிற்கு ரூ.35,900 முதல் ரூ.1,13,500





விண்ணப்பிக்கும் முறை : தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தில் பதிவு செய்ய கட்டணம் ரூ.150. ஒருமுறை பதிவு செய்து நிரந்தர பதிவு எண்ணை பெற்று 3 ஆண்டுகளுக்கு எத்தனை தேர்வுகள் வேண்டுமானாலும் எழுதலாம்.
தேர்வுக்கட்டணம் : பொதுப்பிரிவினருக்கு ரூ.150. (தாழ்த்தப்பட்ட, பழங்குடியினர் பிரிவினருக்கு தேர்வுக்கட்டணம் இல்லை. பிற்படுத்தப்பட்ட பிரிவினருக்கு 3 முறை தேர்வுக்கட்டணத்திலிருந்து விலக்கு.)





தேர்வு நாள் : ஜூன் 22,2019
விண்ணப்பிக்க கடைசி நாள் : மே 20, 2019
மேலும் விபரங்களுக்கு www.tnpsc.gov.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தை காணவும்.




Top Post Ad

Below Post Ad