இணையதள தகவல் களஞ்சியமான, விக்கிபீடியாவை அனைத்து மொழி வடிவிலும் சீனாவில் முழுமையாக தடை செய்யப்பட்டுள்ளது. சீன மொழியிலான, விக்கிபீடியா இணையதளத்துக்கு, சீனா, 2015ல் ஏற்கனவே தடை விதித்திருந்தது. தற்போது, அனைத்து மொழிகளிலும் அதற்கு தடை விதித்துள்ளது. அதேபோல், பல முக்கியமான சம்பவங்கள் தொடர்பான தகவல்களுக்கும், இணையதளத்தில் தடை விதிக்கப்பட்டுள்ளது. சீனாவின் தியான்மெனில், 1989 ஜூன், 4ல் நடந்த மாணவர் போராட்டத்தின், 30வது ஆண்டு அனுசரிக்கப்பட உள்ள நிலையில், அது தொடர்பான தகவல்களுக்கு, சீன அரசு தடை விதித்துள்ளது.