Type Here to Get Search Results !

அத்திவரதரை தரிசிக்க வந்த கட்டுக்கடுங்காத கூட்டம்..: நெரிசல் காரணமாக மூச்சத்திணறி இரு பெண்கள் உள்பட 4 பேர் உயிரிழப்பு


அத்திவரதரை தரிசிக்க வந்த 4 பேர் கூட்ட நெரிசல் காரணமாக மூச்சத்திணறி உயிழந்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.  ஆண்டுகளுக்கு ஒருமுறை காட்சி தரும் அத்திவரதர் பெருவிழா கடந்த ஜூலை 1ம் தேதி தொடங்கி ஆகஸ்ட் 17ம் தேதி வரை காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவிலில் நடைபெறுகிறது. கடந்த 17 நாள்களில் சுமார் 20 லட்சத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் அத்திவரதரை தரிசித்துள்ளனர். தொடர்ந்து 18ம் நாளில் அத்திவரதர் கத்திரிப்பூ நிற பட்டாடை அணிந்து பக்தர்களுக்குக் காட்சியளித்து வருகிறார். இன்று அதிகாலை முதலே ஆயிரக்கணக்கில் பக்தர்கள் வரிசையில் காத்திருந்து தரிசனம் செய்து வருகிறார்கள். இதனால் காஞ்சிபுரத்தின் பல்வேறு பகுதிகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.
இதற்கிடையில், அத்திவரதரை தரிசிக்க வந்த 100க்கும் மேற்பட்ட பக்தர்கள் திடீரென கூட்ட நெரிசலில் சிக்கி மயக்கம் அடைந்ததாகத் தகவல்கள் வெளியானது. ஆனால் இத்தகவலுக்கு மறுப்பு தெரிவித்த மாவட்ட ஆட்சியர் பொன்னையன், தெற்கு மாட வீதியில் அமைக்கப்பட்டுள்ள மருத்துவ முகாமில் கடந்த ஜூலை 1 முதல் இதுவரை 100 பேருக்கு மருத்துவ முகாமில் ஓ.ஆர்.எஸ் கரைசல் கொடுக்கப்பட்டு சிகிச்சையளிக்கப்பட்டது. இந்த தகவல், மறுவி 100 பேர் மயக்கமடைந்தனர் என்ற தவறான தகவல் மக்களிடையே ஊடகங்களில் பரவியுள்ளது. கோயில் சுற்றுவட்டாரத்தில் 14 மருத்துவ முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளது என விளனக்கமளித்தார்.

இந்த நிலையில், அத்திவரதரை தரிசிக்க வந்த 3 பேர், கூட்ட நெரிசல் காரணமாக மூச்சுத்திணறி உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மூச்சுத்திணறி மயங்கி விழுந்த மூவரும் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர். முதல்கட்ட விசாரணையில் உயிரிழந்தவர்கள், ஆந்திர மாநிலம் குண்டூர் பகுதியை சேர்ந்த நாராயணி, சென்னை ஆவடியை சேர்ந்த ராதாமணி, நடராஜன், சேலத்தை சேர்ந்த ஆனந்தராஜன் என்பது தெரியவந்துள்ளது. இதில் ஒரு பெண்ணின் உடல் காஞ்சிபுரம் அரசு மருத்துவமனையிலும், இருவரின் உடல்கள் செங்கல்பட்டு அரசு மருத்துவமனையிலும் வைக்கப்பட்டுள்ளது. இவர்கள் நாள்வரும் இலவச தரிசனத்திற்கான வரிசையில் காத்திருந்தவர்கள் என கூறப்பட்டுள்ளது.

அதுமட்டுமல்லாது, சுமார் 10 பேர் காஞ்சிபுரம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்திவரதரை தரிசிக்க வந்த 4 பேர் உயிரிழந்துள்ளது பக்தர்கள் மற்றும் பொதுமக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதற்கிடையில், அசம்பாவிதம் நடைபெற்ற பகுதியில், போலீசார் எண்ணிக்கை குறைவாக இருந்ததாகவும், மாவட்ட நிர்வாகம் சார்பில் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று பக்தர்கள் புகார் தெரிவித்துள்ளனர். நாளுக்கு நாள் கூட்டம் அதிகரிக்கும் நிலையில், சுமார் 5000க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட வேண்டும். ஆனால், 2000க்கும் மேற்பட்ட போலீசார் மட்டுமே பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர் என புகார் எழுந்துள்ளது.


Top Post Ad

Below Post Ad