Type Here to Get Search Results !

சிறுவனின் வாய்க்குள் இருந்த 526 பற்கள்.. அதிர்ந்து போன மருத்துவர்கள்..



சென்னையில் 7 வயது சிறுவனின் வாயில் 526 பற்கள் இருந்ததை கண்டு, மருத்துவர்கள் அதிர்ந்து போயுள்ளனர்.


சென்னையைச் சேர்ந்த 7 வயது சிறுவன் இடது தாடை வீங்கியபடி, பல் மருத்துவமனைக்கு தனது பெற்றோருடன் வந்துள்ளான். அந்த சிறுவனை எக்ஸ்-ரே பரிசோதனை செய்ததில், அவனது வாய்க்குள், தாடை எழும்பை ஒட்டி ஏராளமான குட்டி குட்டி பற்கள் வளர்ந்திருப்பதை கண்டுபிடித்துள்ளனர். மேலும் அந்த தாடை எழும்பைச் சுற்றி வாய்க்குள் தெரியாத வகையில் ஏராளமான பற்கள் வளர்ந்திருப்பதைப் பார்த்த மருத்துவர்கள் அதிர்த்து போயினர்.


சிறுவனுக்கு ஏற்பட்டிருக்கும் பிரச்சனை குறித்து மருத்துவர்கள் பெற்றோருக்கு எடுத்துச் சொல்லி அறுவை சிகிச்சைக்கு சம்மதிக்க வைத்தனர். அதன்பிறகு சுமார் 5 மணி நேரம் அறுவை சிகிச்சை செய்து 526 பற்களையும் அகற்றியுள்ளனர்.


இது குறித்து மருத்துவர்களிடம் கேட்டபோது, மோசமான கதிர்வீச்சு பாதிப்பு மற்றும் செல்ஃபோன் டவர்களில் இருந்து வெளியாகும் கதிர்வீச்சு காரணமாக மரபணு கோளாறு ஏற்பட்டு இவ்வாறு நடந்திருக்கலாம் என கூறியுள்ளனர். இதற்கு முன் கடந்த 2014 ஆம் ஆண்டு மும்பையில் இளைஞரின் வாயில் இருந்து 232 பற்கள் மருத்துவர்களால் அகற்றப்பட்டது குறிப்பிடத்தக்கது.


Top Post Ad

Below Post Ad