தென் கொரியாவைச் சேர்ந்த யூ டியூப் நட்சத்திரமான 6 வயது சிறுமி போரம் மாத வருமானம் 3.1 மில்லியன் (இந்திய மதிப்பில் சுமார் ரூ.21 கோடி) என்றும், சியோலில் ரூ.55 கோடிக்கு 5 அடுக்கு மாடிகள் கொண்ட வீடும் வாங்கியுள்ளார்.
தென் கொரியாவைச் சேர்ந்த ஆறு வயது யூ டியூப் நட்சத்திரம் போரம்(6). இவருக்கு 2 யூ டியூப் சேனல்கள் உள்ளன. ஒரு சேனலில், உலக அளவில் குழந்தைகள் விளையாடும் பொம்மைகளுக்கு மதிப்பாய்வு கூறுவதுதான் இவருடைய பணி. அதற்காக 13.6 மில்லியன் சந்தாதாரர்களைப் பெற்றுள்ளார். மற்றொன்று 17.6 மில்லியன் சந்தாதாரர்களைக் கொண்ட வலைப்பதிவு.
குழந்தைகள் விளையாடும் பொம்மைகளுக்கு மழலை வார்த்தைகளால் இவர் கூறும் ரிவ்யூவை கேட்டு ரசிக்க, சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை பெரிய ரசிகர் பட்டாளமே உள்ளதாம்.
இவர் அனைவரது மனதிலும் யூ டியூப் நட்சத்திரமாகவே வளம் வருகிறார்.
இந்த சேனல்கள் மூலம் தென் கொரியாவில் மிகவும் பிரபலமான போரமை பின் தொடர்பவர்கள் 31 மில்லியனுக்கும் அதிகமானவர்கள். இதனால் போரமின் மாத வருமானம் 3.1 மில்லியன் (இந்திய மதிப்பில் சுமார் ரூ.21 கோடி) என குறிப்பிட்டுள்ளனர்.
இவரது பெற்றோர் தற்போது சியோல் பகுதியில் ரூ.55 கோடிக்கு (8 மில்லியன் டாலர்) 5 அடுக்கு மாடிகள் கொண்ட வீடு ஒன்றையும் போரமிற்காக விலைக்கு வாங்கியுள்ளனர்.
யூ டியூப் நட்சத்திரமான போரமின் இந்த அசுர வளர்ச்சிக்கும், அபார வருமானத்துக்கும் முக்கிய காரணம் என்ன? என்பதை யூ டியூப் நிபுணர்கள் கூறியுள்ளனர்.
இதில், போரமின் சேனலை 31 மில்லியன் சந்தாதாரர்களையும், ஏராளமான ரசிகர்களைப் பெற்றுள்ளது. அவர்கள் அனைவரும் ஆக்டிவில் உள்ளனர். இதனால் போரமின் மாத வருமானம் 3.1 மில்லியன் (இந்திய மதிப்பில் சுமார் ரூ.21 கோடி) என குறிப்பிட்டுள்ளனர்.
'சமையல் பொரோரோ பிளாக் நூடுல்' (Cooking Pororo Black Noodle) என்பது போரமின் முக்கியமான வீடியோக்களில் ஒன்றாகும், இது யூ டியூபில் மிகவும் பிரபலமாக உள்ளது, ஏனெனில் இது 376 மில்லியன் தடவைகளுக்கு மேல் பார்க்கப்பட்டுள்ளது.