Type Here to Get Search Results !

1951 முதல் 2019 வரை.. உருவான புதிய மாநிலங்கள்.. ஒரு பார்வை!

1951-ஆம் ஆண்டு முதல் 2019-ஆம் ஆண்டு வரை புது புதிதாக ஏராளமான மாநிலங்கள் உருவாக்கப்பட்டுள்ளன.

இந்தியா என்பது தென்காசியாவில் மிக பெரிய நாடு. பரப்பளவில் 2-ஆவது மிகப் பெரிய நாடு, மக்கள்தொகையிலும் மிகப் பெரிய நாடு ஆகும். இந்த தாய் திருநாட்டில் நேற்று வரை 29 மாநிலங்கள் 9 யூனியன் பிரதேசங்கள் இருந்து வந்தன.

இந்த நிலையில் இன்று ஜம்மு- காஷ்மீர் மாநில அந்தஸ்தை இழந்தது. இதனால் இந்தியாவில் மாநிலங்களின் எண்ணிக்கை தற்போது 28 ஆக குறைந்துள்ளது. அது போல் யூனியன் பிரதேசங்களின் எண்ணிக்கை 9-ஆக அதிகரித்துள்ளது.

1951-ஆம் ஆண்டு முதல் 2019-ஆம் ஆண்டு வரை புதிய புதிய மாநிலங்கள் உருவானது எப்படி என்பது குறித்து பார்ப்போம். கடந்த 1951-ஆம் ஆண்டு சுதேச அரசுகள் ஒருங்கிணைக்கப்பட்டன. இதைத் தொடர்ந்து 1953-ஆம் ஆண்டு மதராஸ் மாகாணத்தில் இருந்து ஆந்திர பிரிக்கப்பட்டது.

1954 ஆம் ஆண்டு புதுச்சேரி, மாஹே, யேனம், காரைக்கால், சந்தர்நகர் ஆகியன யூனியன் பிரதேசமாக மாறியது. 1956-ஆம் ஆண்டு மொழிவாரி மாநிலங்களாக இந்திய மாநிலங்கள் மறுசீரமைப்பு செய்யப்பட்டன. 1960ஆம் ஆண்டு மும்பையானது மகாராஷ்டிரம் மற்றும் குஜராத் மாநிலமாக பிரிந்தது.

1961-ஆம் ஆண்டு கோவா விடுவிக்கப்பட்டு, தாத்ரா நகர் ஹவேலி, டாமன் மற்றும் டையூ ஆகியவற்றுடன் இணைக்கப்பட்டது. நாகாலாந்து என்ற தனிமாநிலம் 1963-ஆம் ஆண்டு உருவானது. 1966-ஆம் ஆண்டு பஞ்சாப் மறுசீரமைக்கப்பட்டது. சில பகுதிகள் ஹிமாச்சல் பிரதேசத்துடன் இணைக்கப்பட்டன. ஹரியாணா என்ற மாநிலம் உருவானது.

1972-ஆம் ஆண்டு மேகாலயா, மிசோரம், அருணாசல பிரதேசம் ஆகியன அஸ்ஸாம் மாநிலத்திலிருந்து பிரிக்கப்பட்டன. 1975-ஆம் ஆண்டு சிக்கிம் என்ற தனி மாநிலம் உருவானது. 2000-ஆம் ஆண்டு உத்தராஞ்சல் (தற்போது உத்தரகாண்ட்), சத்தீஸ்கர், ஜார்க்கண்ட் ஆகிய மாநிலங்கள் உருவாக்கப்பட்டன.

2014-ஆம் ஆண்டு ஆந்திர பிரதேசத்திலிருந்து தெலுங்கானா தனி மாநிலமாக உருவானது. 2019-ஆம் தேதி ஆகஸ்ட் 5-ஆம் தேதி ஜம்மு- காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து நீக்கப்பட்டு ஜம்மு காஷ்மீர், லடாக் ஆகிய 2 யூனியன் பிரதேசங்கள் உருவாக்கப்பட்டுள்ளன.


Top Post Ad

Below Post Ad