Type Here to Get Search Results !

தமிழ்நாடு பட்ஜெட் 2024: 2024-2025-ம் ஆண்டுக்கான பொது பட்ஜெட்


*தமிழ்நாடு பட்ஜெட் அறிவிப்புகள்.

*உயர்கல்வித்துறைக்கு ரூ. 8,212 கோடி நிதி ஒதுக்கீடு.*

அரசு பள்ளியில் பயிலும் மாணவர்களுக்கான தமிழ் புதல்வன் என்ற புதிய திட்டம் அறிமுகப்படுத்தப்படும்.

அரசு பொறியியல் மற்றும் கலை அறிவியல் கல்லூரிகளின் கட்டட கட்டமைப்பு பணிகளுக்கு ரூ.700 கோடி நிதி ஒதுக்கீடு.

கோவையில் கலைஞர் பெயரில் நூலகம் மற்றும் அறிவியல் மையம் உருவாக்கப்படும்.

6 முதல் 12 வரை பயின்று உயர்கல்வி சேரும் மாணவர்களுக்கு ரூ. 1,000 வங்கிக்கணக்கில் செலுத்தப்படும்.

ஒரு லட்சம் மாணவர்களுக்கு கல்விக்கடன் வழங்க ₹2500 கோடி ஒதுக்கீடு.

நான் முதல்வன் திட்டத்திற்கு ₹200 கோடி ஒதுக்கீடு.

தமிழ்ப்புதல்வன் என்ற புதிய திட்டத்திற்கு ₹360 கோடி ஒதுக்கீடு.

பணிபுரியும் மகளிருக்கான தோழி விடுதிகளை புதியதாக அமைக்க ₹26 கோடி ஒதுக்கீடு.

உயர்கல்வி பெற விரும்பும் மூன்றாம் பாலினத்தவர்களுக்கான அனைத்து செலவுகளையும் அரசே ஏற்கும்.

மக்களை தேடி மருத்துவ திட்டத்திற்கு ரூ.843 கோடி ஒதுக்கீடு.

இன்னுயிர் காப்போம் நம்மை காக்கும் 48 திட்டத்தின் மருத்துவ செலவுத்தொகை ரூ.1 லட்சத்தில் இருந்து ரூ.2 லட்சமாக உயர்த்தப்படும்.

ராமநாதபுரத்தில் தமிழ்நாடு நீர் விளையாட்டு ஒலிம்பிக் அகாடமி அமைக்கப்படும்.

தஞ்சாவூர் செங்கிப்பட்டியில் ரூ.120 கோடி மதிப்பில் புதிய சிப்காட் தொழில் பூங்கா அமைக்கப்படும்.


▪️ சிலப்பதிகாரம், மணிமேகலை உள்ளிட்ட நூல்களை மேலும் 25 மொழிகளில் மொழிபெயர்ப்பு செய்ய ₹2 கோடி ஒதுக்கீடு.

▪️ அடுத்த மூன்று ஆண்டுகளில் 600 புதிய நூல்கள் தமிழில் வெளியிடப்படும்.

▪️ தமிழ் மொழியை நவீனப்படுத்த AI உள்ளிட்ட புதிய தொழில்நுட்பங்களை ஊக்குவிக்க ₹5 கோடி ஒதுக்கீடு.

▪️ முசிறி, தொண்டி ஆகிய இடங்களிலும் அகழாய்வு நடத்தப்படும்.

▪️ ₹65 லட்சம் செலவில் அழகன் குளத்தில் ஆழ்கடல் அகழாய்வு மேற்கொள்ளப்படும்.

“விவசாயிகளுக்கு வழங்கப்படும் இலவச மின்சாரத்திற்கு ரூ.500கோடி ஒதுக்கீடு;

தமிழ் இணைய மின் கல்வி நிலையங்களுக்கு ரூ.2 கோடி நிதி ஒதுக்கீடு”

- நிதியமைச்சர் தங்கம் தென்னரசு


தமிழ்நாடு பட்ஜெட் அறிவிப்புகள்

▪️ 2023ம் ஆண்டுக்குள் தமிழ்நாட்டின் ஊரகப் பகுதிகளில் 8 லட்சம் கான்கிரீட் வீடுகள் கட்டப்படும்; கலைஞரின் கனவு இல்லம் என இத்திட்டத்திற்கு பெயர் சூட்டல்

▪️ கிராம சாலைகள் மேம்பாட்டு திட்டத்தில் 2000 கி.மீ. சாலைப்பணிகள் ₹1000 கோடி

*2024-25 ம் நிதியாண்டுக்கான தமிழ்நாடு அரசின் பட்ஜெட்டை தாக்கல் செய்தார் நிதியமைச்சர் தங்கம் தென்னரசு

100 ஆண்டுகளில் பேரவையில் தாக்கல் செய்த பட்ஜெட் தமிழர்களின் வாழ்வை உயர்த்தியது.

நாட்டிலேயே 2வது பொருளாதார மாநிலமாக தமிழ்நாடு திகழ்கிறது-பேரவையில் நிதியமைச்சர் தங்கம் தென்னரசு.

சிலப்பதிகாரம், மணிமேகலை காப்பியங்களை 25 இந்திய மற்றும் உலக மொழிகளில் மொழிபெயர்க்க ரூ.2 கோடி ஒதுக்கீடு.

கீழடி, வெம்பக்கோட்டை, உள்ளிட்ட 8 இடங்களில் தொல்லியல்துறை பணிகள் மேற்கொள்ளப்படும்; ரூ.5 கோடி நிதி ஒதுக்கீடு.

அகழ்வாராய்ச்சிக்கு என நாட்டிலேயே தமிழ்நாட்டில் தான் அதிக நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

விவசாயிகளுக்கு வழங்கப்படும் இலவச மின்சாரத்திற்கு ரூ.500கோடி ஒதுக்கீடு.

தமிழ் இணைய மின் கல்வி நிலையங்களுக்கு ரூ.2 கோடி நிதி ஒதுக்கீடு.

2000 கி.மீ அளவில் புதிதாக சாலை அமைப்பதற்கு ரூ.1000 கோடி நிதி ஒதுக்கீடு.

மாநகர பகுதிகளில் சாலை விரிவாக்க பணிக்காக ரூ.300 கோடி நிதி ஒதுக்கீடு.

கிராமப் பகுதிகளில் சாலை திட்டப்பணிகளுக்கு ரூ.1,000 கோடி ஒதுக்கீடு.

2030-க்குள் ஊரகப் பகுதிகளில் 8 லட்சம் கான்கிரீட் வீடுகள் கட்டித் தரப்படும்.

சிங்காரச் சென்னை திட்டத்திற்கு மேலும் ரூ.500 கோடி ஒதுக்கீடு.

முதலமைச்சரின் தாயுமானவர் திட்டம் அறிமுகம்.

பெசண்ட் நகர், கோவளம், எண்ணூர் உள்ளிட்ட கடற்கரை பகுதிகளை மேம்படுத்த ரூ.100 கோடி ஒதுக்கீடு.

5 லட்சம் ஏழை எளிய மக்களை வறுமைக் கோட்டிலிருந்து மீட்க தாயுமானவன் திட்டம் ஏற்படுத்தப்பட்டு ரூ.25,972 கோடி ஒதுக்கீடு.

2,000 புதிய மேல்நிலை குடிநீர் தொட்டிகள் அமைக்க ரூ.365 கோடி நிதி ஒதுக்கீடு.

ரூ.3,500 கோடியில் கலைஞரின் கனவு இல்லம் என்ற பெயரில் திட்டம் செயல்படுத்தப்படும். மதிப்பீட்டில் செயல்படுத்தப்படும்

*‘நகர்ப்புற பசுமை திட்டம்’ என்ற புதிய திட்டம் தொடங்கப்படும்.*

மதுரை மற்றும் சேலத்தில் 24 மணி நேரமும் தடையற்ற குடிநிர் விநியோகம் செய்யப்படும்.

ரூ.1,517 கோடி மதிப்பீட்டில் நெமிலியில் கடல்நீரை குடிநீராக்கும் நிலையம் அமைக்கப்பட்டு வருகிறது.

அடையாறு, கொசஸ்தலை உள்ளிட்ட நீர்நிலைகளை சீரமைக்க நடவடிக்கை.

வடசென்னையை மேம்படுத்த ரூ.1,946 கோடி ஒதுக்கீடு.

அரசு உதவிபெறும் பள்ளிகளிலும் புதுமைப்பெண் திட்டம் தொடங்கப்படும்.

மகளிர் உரிமைத்தொகை திட்டத்திற்காக, இந்தாண்டிற்கு ரூ.13,720 கோடி ஒதுக்கீடு.

மலைப்பகுதிகளிலும் மகளிர் இலவசப் பேருந்து திட்டம் தொடங்க ரூ. 3,050 கோடி நிதி ஒதுக்கீடு.

உண்டு உறைவிட மாதிரி பள்ளிகளில் 15,000 திறன்மிகு வகுப்பறைகள் அமைக்க ரூ.300 கோடி நிதி ஒதுக்கீடு.

இல்லம் தேடி கல்வி திட்டம் 2ம் கட்டத்திற்கு ரூ.100 கோடி நிதி ஒதுக்கீடு.

க.அன்பழகன் நூற்றாண்டினை முன்னிட்டு, பள்ளிக்கல்வி வளர்ச்சிக்கு ரூ.1,000 கோடி பள்ளி கட்டமைப்பு வசதிகளுக்காக நிதி ஒதுக்கீடு.

Top Post Ad

Below Post Ad