Type Here to Get Search Results !

படித்ததில் பிடித்தது

முன்பு ஜெர்மனி நாடு பிளவுபட்டிருந்தபோது பெர்லின் நகரத்தை கிழக்காகவும் மேற்காகவும் பெரிய மதில் சுவர் பிரித்தது.

ஒருநாள் கிழக்கு பெர்லினை சேர்ந்த சிலர், ஒரு லாரி நிறைய குப்பை கூளங்களை கொண்டுவந்து மதில் தாண்டி மேற்கு பெர்லின் பக்கம் கொட்டினார்கள்...அவ்வளவு குரோதம்...! 😩

மேற்கு பெர்லினை சேர்ந்த மக்களும் அதே மாதிரி செய்திருக்கலாம். ஆனால் அவர்கள் அப்படி செய்யவில்லை. மாறாக ஒரு லாரி நிறைய உணவு பொருட்கள், ரொட்டிகள், பால் பொருட்கள் மற்றும் மளிகை சாமான்களை கொண்டுவந்து மதில் தாண்டி இந்த கிழக்கு பெர்லின் பக்கம் அழகாக அடுக்கி வைத்துவிட்டு போனார்கள்.

மேலும் அதன் மீது இவ்வாறு எழுதி வைத்து விட்டு போனார்கள் :

"ஒவ்வொருவரும் தன்னிடம் என்ன இருக்கிறதோ அதைதான் கொடுப்பார்கள்"

"EACH GIVES WHAT HE HAS"..😍

எவ்வளவு நிதர்சனமான உண்மை....! உங்களிடம் இருப்பதைதான் உங்களால் கொடுக்க முடியும்.

உங்களுக்கு 'உள்ளே' என்ன இருக்கிறது...?

💬அன்பா - வெருப்பா ...?

💬அமைதியா - வன்முறையா...?

💬நல்லெண்ணம்  - தீயஎண்ணம்...?

💬உங்கள் திறமை, பலம் அழிவுப்பாதையை நோக்கியா - வளர்ச்சிப்பாதையை நோக்கியா...?

இத்தனை காலங்களில் நீங்கள் அடைந்தது என்ன..?

"ஒவ்வொருவரும் தன்னிடம் என்ன இருக்கிறதோ அதைதான் கொடுப்பர்

_படித்தேன் பகிர்கிறேன்_

Top Post Ad

Below Post Ad