வியாழனை விட சனி கிரகமே அதிக நிலவுகளைக் கொண்டதாக அமெரிக்க விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். சனி கிரகத்தை மொத்தம் 82 நிலவுகள் சுற்றி வருகிறது. தற்போது நடந்த ஆய்வின் முடிவில் இதுவே அதிக நிலவுகள் கொண்ட கிரகமாக இருக்கிறது. சனி கிரகத்தை இன்னும் 100 நிலவுகள் சுற்றிவரக்கூடும் எனவும் தெரிவிக்கின்றனர். இதுவரை இருந்த வியாழனை பின்னுக்குத் தள்ளி சனி அதிக நிலவுகள் கொண்ட கிரகத்தில் முதல் இடத்தில் உள்ளது.