தமிழ்நாடு அரசுப்பணியாளர்கள் தேர்வாணையம் நடத்தும் பொதுத்தேர்வில் அசுரன் திரைப்படம் சம்பந்தமான கேள்வி கேட்கப்பட்டுள்ளது. தமிழ் சமூகத்தில் நிலவும் பஞ்சமி நில அரசியலை பேசிய அசுரன் திரைப்படம் மக்களிடம் பெரும் வரவேற்பை பெற்றது. அந்த திரைப்படம் பேசிய கருத்துக்கள் தொடர்பான விவாதங்கள் தொடர்வதற்கு மத்தியில் அரசுத் தேர்விலும் ’அசுரன்’ இடம்பெற்றுள்ளது முக்கியத்துவம் பெறுகிறது.