Type Here to Get Search Results !

மாணவர்களின் பசிபோக்கும் மகத்தான சேவை


பசியோடு படித்தால் மாணவர்களுக்கு கல்வியறிவு எட்டாது என்ற காரணத்தால் அரசால் பள்ளிகளில் சத்துணவு திட்டம் அமல்படுத்தப்படுகிறது. அதில் பல்வேறு வித உணவுகள் வழங்கப்படுகிறது. ஆனால் இன்றைய காலகட்டத்தில் வீடுகளில் காலை உணவை பெரும்பான்மையான பள்ளி மாணவர்கள் சாப்பிடுவது இல்லை. அதனால் உடல் ரீதியான உபாதைகள் ஆட்கொண்டு, பள்ளிக்கு வந்தவுடன் கல்வியில் கவனம் செலுத்தாத நிலை உள்ளது. இதற்கு மாற்றாக பெரியகுளம் பகுதியில் உள்ள 31 அரசு பள்ளிகளில் படிக்கும் ஏழை மாணவர்களுக்கு காலை சிற்றுண்டிகளை 3 ஆண்டாக தொடர்ந்து வழங்கி, அவர்களின் உடல்நலன், கல்வி நலனில் அக்கறை செலுத்தி வருகின்றனர் இருவர்.பெரியகுளம் ஸ்ரீராம்நகர் ஊராட்சி ஒன்றிய ஆரம்பப்பள்ளியின் இடைநிலை ஆசிரியர் டி.ஆனந்தன். தேனி முதுகுதண்டுவட பாதிப்படைந்தோர் நலவாழ்வு மையம் ஸ்ரீராம் டிரஸ்ட் நிர்வாகி வெங்கடபூபதி. இந்த இருவரின் சீரிய முயற்சியாலும், பெங்களூருவில் உள்ள ஸ்ரீசத்ய சாய் அன்னாபூர்ணா அறக்கட்டளை சார்பில் அரசு பள்ளி மாணவர்களுக்கு காலை சிற்றுண்டிகள் வழங்கப்பட்டு வருகிறது.ஆசிரியர் ஆனந்தன் கூறுகையில், உலக சுகாதார நிறுவனம் இந்தியாவில் நடத்திய ஆய்வின்படி மாணவ, மாணவிகளில் 50 சதவீதம் பேர், காலை உணவு சாப்பிடாத காரணத்தால், மயக்கம், படிப்பில் கவனச் சிதறல், சோர்வு, வயிறு கோளாறுகளால் பாதிக்கப்படுவது தெரியவந்தது. அதனால்தான் நானும், வெங்கடபூபதியும் இணைந்து பெரியகுளம் வட்டாரத்தில் உள்ள ஏழைக் குழந்தைகள் படிக்கும் பள்ளிகளை தேர்வு செய்து கடந்த மூன்றாண்டுகளாக பிஸ்கட், ரொட்டி, தானியங்கள் என சத்துமிக்க காலை உணவை இலவசமாக வழங்கி வருகிறோம். அடுத்தவாரத்தில் இருந்து மீண்டும் சிற்றுண்டிகள் வழங்க உள்ளோம். முதற்கட்டமாக 1800 பேருக்கு வழங்குவதற்கான பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளது. இந்த சேவையில் சிற்றுண்டிகள் வாங்கித்தர விரும்புவோர் 99409 42871 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம். அதிகம் கொடையாளர்கள் இணைந்தால், திட்டத்தை விரிவு படுத்தி ஏராளமானோருக்கு உதவலாம், என்றார்.


Top Post Ad

Below Post Ad