விவசாய நகைக்கடனை, 7 சதவீத வட்டியில் வழங்கக்கூடாது என வங்கிகளுக்கு மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது. நாடுமுழுவதும் தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளில் 4 சதவீதம் வட்டிக்கு விவசாய நகைக்கடன் வழங்கும் திட்டம் நடைமுறையில் உள்ளது. இதன்படி வாடிக்கையாளர்கள் ரூ.1 லட்சம் வரை நகைகளை அடகு வைத்து கடன் பெற கையொப்பமிட்டு உறுதிமொழி பத்திரம் தாக்கல் செய்தால் போதும். அரை மணிநேரத்தில் நகைக்கடன் பெற முடியும். மேலும் இதே வட்டியில் ரூ.3 லட்சம் வரை கடன் பெற விவசாய நிலங்களின் விபரங்களை வழங்கவேண்டும். அது தொடர்பான கரத்தீர்வை ரசீதுகளை தாக்கல் செய்ய வேண்டும்.
இந்த கடன் திட்டத்தில் 9 சதவீத வட்டிக்கே விவசாய நகைக்கடன் வழங்கப்படுகிறது என்றாலும், அதில் 5 சதவீதம் மத்திய அரசு மானியமாக வங்கிகளுக்கு வழங்கும் நடைமுறை செயல்பாட்டில் இருந்து வருகிறது. விவசாய நகைக்கடன் பெறுகின்றவர்களில் பெரும்பாலானவர்கள் உண்மையான விவசாயிகள் அல்ல என்பது தொடர்பான புகார்கள் அதிக அளவில் சென்ற நிலையில் இது தொடர்பாக மத்திய அரசு நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டுள்ளது. இந்த நகைக்கடன் திட்டம் உண்மையான விவசாயிக்கு மட்டுமே கிடைக்கிறது என்பதை உறுதி செய்ய இனி ‘கிசான் கிரெடிட் கார்டு’ வழியாக மட்டுமே கடன் வழங்க திட்டமிடப்பட்டுள்ளதாகவும், இது தொடர்பாக ஆலோசனைகள் நடைபெற்று வருவதாகவும் கூறப்படுகிறது. ஏற்கனவே கிசான் கிரெடிட் கார்டு ஆதார் அட்டையுடன் இணைக்க உத்தரவிடப்பட்டது