Type Here to Get Search Results !

2 பேருக்கு கொரோனா வைரஸ் உறுதி என வாட்ஸ்அப்பில் பொய் தகவல் பரப்பிய 3 பேர் கைது: குடியாத்தத்தில் பரபரப்பு


குடியாத்தத்தில் 2 பேருக்கு கொரோனா வைரஸ் உறுதி செய்யப்பட்டதாக வாட்ஸ் அப்பில் பொய்யான தகவல் பரப்பிய 3 வாலிபர்களை போலீசார் கைது செய்தனர்.வேலூர் மாவட்டம் குடியாத்தத்தை சேர்ந்த 2 இளைஞர்களுக்கு கொரோனா வைரஸ் இருப்பதாகவும், இதனை குடியாத்தம் அரசு மருத்துவமனை நிர்வாகத்தினர் உறுதி செய்ததாகவும் தனியார் தொலைக்காட்சி செய்தி வெளியிட்டதைபோல் சித்தரித்து 2 இளைஞர்களின் புகைப்படத்துடன் வீடியோ தயாரித்து, வாட்ஸ் அப், பேஸ்புக் மூலம் சிலர் ஷேர் செய்துள்ளனர்.இதுகுறித்து குடியாத்தம் ேபாலீசார் வழக்குப்பதிந்து வாட்ஸ் அப்பில் பொய்யான தகவல் பரப்பியவர்களை தேடி வந்தனர்.

 இந்நிலையில், குடியாத்தம், நெல்லூர்பேட்டையை சேர்ந்த தனியார் கல்லூரி 2ம் ஆண்டு மாணவன் விஜி(19), ராஜாகோவில் கிராமத்தை சேர்ந்த டிப்ளமோ பட்டதாரி சுகுமார்(20), செதுக்கரையை சேர்ந்த எலக்ட்ரீசியன் சிவக்குமார்(22) ஆகிய 3 பேர்தான் இதை பரப்பியவர்கள் என தெரிய வந்தது. அவர்கள் மீது போலீசார் வழக்குப்பதிந்து நேற்று கைது செய்தனர்.

Source Dinakaran

Top Post Ad

Below Post Ad