Type Here to Get Search Results !

எந்த குரூப் ரத்தம் கொண்டவர்களை அதிகம் தாக்குகிறது கொரோனா? சீன ஆய்வு முடிவில் தகவல்





உலக நாடுகளை நடுநடுங்க செய்து வரும் கொரோனா வைரஸ் 'ஏ' ரத்த வகை கொண்டவர்களை அதிகம் தாக்குவதாக சீனாவில் நடத்தப்பட்ட ஆய்வு முடிவுகளில் தெரியவந்துள்ளது.
கொரோனா வைரஸ் இப்போதும் மிகவும் புதிரான வைரஸாக இருக்கிறது. இது எப்படி தோன்றியது, எதில் இருந்து உருவானது என்ற பின்னணி இன்னும் கண்டுபிடிக்கப்படவில்லை.

உலக சுகாதார ஆராய்ச்சி மையம் தொடங்கி உலகம் முழுக்க பல நாடுகள் இது தொடர்பாக ஆராய்ச்சி செய்து வருகிறது. உலகம் முழுக்க 1,98,556 பேர் இந்த வைரஸ் காரணமாக பாதிக்கப்பட்டுள்ளனர். உலகம் முழுக்க 7987 பேர் இதனால் பலியாகியுள்ளனர்.


இந்த நிலையில், சீன ஆய்வாளர்கள் வுகானில் உள்ள 2 மருத்துவமனைகளிலும், ஷென்சென் நகரில் உள்ள ஒரு மருத்துவமனையிலும் முக்கியமான ஆய்வு ஒன்றை நடத்தியுள்ளனர்.

அதாவது. இரத்த வகைகளை வைத்து SARS-CoV-2 பரிசோதனையைப் பயன்படுத்தி 2,173 நோயாளிகளின் இரத்த வகைகளை வைத்து 3,694-க்கும் மேற்பட்ட ஆரோக்கியமான மக்களுடன் கொரோனா வைரஸ் நேர்மறை ஆய்வு செய்யப்பட்டு, ஒப்பிடப்பட்டுள்ளது. ஆய்வின்படி, வுகான் ஜின்யின்டன் மருத்துவமனையில் ஆய்வு செய்யப்பட்ட 1,775 நோயாளிகளில், 37.75 சதவீத பேர் டைப்-ஏ ரத்த வகைகளையும், 9.10 சதவீதம் பேர் டைப்-ஓ ரத்த வகையையும் கொண்டுள்ளனர்.

கொரோனா வைரஸால் டைப்-ஏ ரத்தம் கொண்டவர்கள் அதிகளவில் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், டைப்-ஓ ரத்தம் கொண்டவர்கள் குறைந்த அளவிலே பாதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளது. அந்த மருத்துவமனையில் வைரஸால் இறந்த 206 பேரில் 41.26 சதவீதம் பேர் ஏ ரத்த வகை கொண்டுள்ளதாகவும், 25 சதவீதம் பேர் ஓ ரத்த வகை கொண்டுள்ளதாகவும் ஆய்வில் தெரியவந்துள்ளது. இதற்காக, ஏ வகை ரத்தம் கொண்டவர்கள் பீதி அடைய தேவையில்லை எனவும், ஓ ரத்த வகை கொண்டவர்கள் பாதுகாப்பானவர்களாக இருப்பதாக அர்த்தமில்லை என தியான்ஜின் ஆராய்ச்சியாளர் காவ் யிங்டாய் கூறியுள்ளார்.

அனைவரும் அரசு அதிகாரிகள் கூறியுள்ள வழிகாட்டுதல்களை பின்பற்ற வேண்டும் என அவர் கேட்டுகொண்டுள்ளார். இதற்கு முன் இதேபோல் சார்ஸ் நோய் வந்தபோதும் நடந்தது. இந்த வைரஸ் அதிகமாக ஏ வகை ரத்தம் கொண்டவர்களைத்தான் தாக்கியது. அதுவும் கொரோனா குடும்பத்தை சேர்ந்த வைரஸ் ஆகும். தற்போது அதேபோல் கொரோனா குடும்பத்தை சேர்ந்த இன்னொரு புதிய வைரஸ்தான் தோன்றியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.


Top Post Ad

Below Post Ad