*தமிழகத்தில் நாளை மக்கள் ஊரடங்கு கடைப்பிடிக்கப்படுவதால் எதெல்லாம் இயங்கும், எதெல்லாம் மூடப்படும் என்பதை தெரிந்து கொள்வோம்.....*
*கொரோனா பரவலை தடுக்க உலகம் முழுவதும் தடுப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.*
*இந்த நிலையில் நேற்று முன் தினம் நாட்டு மக்களிடம் பிரதமர் நரேந்திர மோடி உரையாற்றினார்.*
*அப்போது இந்த கொரோனா வைரஸின் தாக்கம் உலக போரில் ஏற்பட்டது போல் இருக்கிறது. வரும் 22ஆம் தேதி அதாவது ஞாயிற்றுக்கிழமை மக்கள் ஊரடங்கை கடைப்பிடிக்க வேண்டும். ஞாயிற்றுக்கிழமை ஒரு நாள் மட்டும் மக்கள் யாரும் வெளியே வர வேண்டாம் என கேட்டுக் கொண்டுள்ளார்.*
*இந்த ஊரடங்கு காலை 7 மணி முதல் இரவு 9 மணிக்கு கடைப்பிடிக்கப்படும். இதையடுத்து நாளை தமிழகத்தில் எதெல்லாம் இயங்கும், எதெல்லாம் மூடப்படும் என்பது குறித்த தகவல்களை பார்ப்போம்.*
*இதெல்லாம் இயங்காது*
*1. டாஸ்மாக் கடைகள்*
*2. அனைத்து சிறு, பெரிய கடைகள்*
*3. கோயம்பேடு மார்க்கெட்*
*4. மெட்ரோ ரயில்கள்*
*5. ரேஷன் கடைகள்*
*6. அரசு, தனியார் பேருந்துகள்*
*7. எல்லைகள் மூடல்*
*8. கேன் குடிநீர் கடைகள்*
*இதெல்லாம் இயங்கும்*
*1. மருத்துவமனைகள்*
*2. மருந்து கடைகள்*
*3. அம்மா உணவகங்கள்*
*4. ஆம்புலன்ஸ் சேவை'*