Type Here to Get Search Results !

முக கவசத்துடன் மணமக்கள்: காஞ்சிபுரத்தில் விழப்புணர்வுடன் நடைபெற்ற திருமணம்



திருநெல்வேலியைச் சேர்ந்த பணி ஓய்வு பெற்ற வட்டாட்சியர் மூர்த்தியின் மகன் எம் கௌதம் கார்த்திக்கும் காஞ்சிபுரம் நெசவாளர் திருவேங்கடத்தின் மகள் தமிழ்ச்செல்விக்கும் காஞ்சிபுரம் கச்சபேஸ்வரர் கோயிலில் நான்கு மாதங்களுக்கு முன்பு திருமணம் நடைபெறும் என நிச்சயம் செய்யப்பட்டிருந்தது.


 சுய ஊரடங்கு நாளை முன்னிட்டு கச்சபேஸ்வரர் கோவில் நடை சாத்தப்பட்டு இருந்ததால் திருமணம் கோயிலில் நடைபெறும் அதற்கு பதிலாக காஞ்சிபுரத்தில் நாராயண பாளையம் தெருவில் உள்ள மணமகள் இல்லத்தில் நடந்தது. திருமணத்திற்கு வந்திருந்த அனைவருக்கும் கை கழுவும் திரவம் மூலம் கை கழுவிய பின்னரே அனுமதிக்கப்பட்டனர்.
 மணமகளுக்கு முக கவசம் அணிந்த நிலையிலேயே மணமகன் மாங்கல்யம் சூட்டினார். உறவினர்கள் பலரும் அட்சதை தூவி வாழ்த்தினார்கள் திருமணம் எளிமையாகவும் மிகக்குறைவான உறவினர்களை மட்டும் அழைத்து அவர்கள் மட்டுமே திருமணத்தில் கலந்து கொண்டனர். 


 பிரதமர் மோடி மற்றும் தமிழக முதல்வர் எடப்பாடி கே பழனிச்சாமி அவர்களது வேண்டுகோளை ஏற்று மிகக்குறைந்த உறவினர்களை மட்டும் வரவழைத்து நிச்சயித்த படி திருமணத்தை நடத்தியதாகவும் மத்திய மாநில அரசுகள் கொரோனா வைரஸ் தாக்குதல் பரவாமல் இருக்க எடுத்து வரும் முயற்சிகளுக்கு அரசுகளுக்கு மணமக்களின் பெற்றோர்கள் நன்றியும் தெரிவித்துக் கொண்டனர்.

Top Post Ad

Below Post Ad