கொரோனா வைரஸ் உலகத்தின் வல்லரசு நாடான அமெரிக்கா தொடங்கி, அதிக மக்கள் தொகை கொண்ட சீனா வரை பலரையும் பயமுறுத்திக் கொண்டு இருக்கிறது.
இதில் நாம் கவனிக்க வேண்டிய முக்கியமான விஷயம் என்ன என்றால் கொரோனா வைரஸ் பற்றி பரவும் பயம்.
இதை சாப்பிட்டால் கொரோனா வந்துவிடுமா.. அதை தொட்டால் கொரோனா வந்து விடுமோ என பலரும் பல கருத்துக்களைச் சொல்லிக் கொண்டு இருக்கிறார்கள்.
இறைச்சி
அதில் மிக முக்கியமான விஷயம் இறைச்சி. சிக்கன், மட்டன், மீன் போன்ற இறைச்சிகளைச் சாப்பிட்டால் கொரோனா பரவுமோ என்கிற அச்சம் பலருக்கும் இருக்கிறது. இந்த அச்சம் வெறும் பேசசு அளவிலோ அல்லது வாட்ஸப் ஃபார்வர்ட்களாக மட்டுமே இருந்து இருந்தால் பிரச்சனை இல்லை. இப்போது நேரடியாக இறைச்சி வியாபாரம் அடி வாங்கும் அளவுக்குப் போய் இருக்கிறது.
வியாபாரம்
இந்த கொரோனா வைரஸ் பயத்திலேயே, சிக்கனுக்கான தேவையும் கணிசமாக குறைந்து இருக்கிறதாம். ஒரு கிலோ சிக்கன் விலை சுமாராக 10 – 30 ரூபாய் சரிந்து இருக்கிறதாம். அதோடு கடந்த மார்ச் 02, 2020 அன்று கோழி வளர்ப்பவர்கள் அரசிடம் 1,750 கோடி ரூபாய்க்கு நிவாரண நிதியை கேட்டு இருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த கொரோனா பயத்தால் சிக்கன் விலை சரிவதைக் குறித்து அனைத்து இந்திய கோழி வளர்ப்பாளர்கள் சங்கம், அரசிடம் விளக்கி இருக்கிறார்களாம்.
FSSAI
சிக்கன், மட்டன், மீன் போன்ற இறைச்சிகளைச் சாப்பிட்டால் கொரோனா வைரஸ் பரவுமா என்கிற கேள்விக்கு இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையம் (FSSAI)-ன் தலைவர், ஜி எஸ் ஜி ஐய்யங்கார், கடந்த வியாழக்கிழமை அன்று, அஸ்ஸோசெம் (Assocham) கூட்டத்தில் பதில் சொல்லி இருக்கிறார்.
என்ன பதில்
என்ன பதில்
அடிப்படையில் கொரோனா வைரஸ் ஒரு விலங்கு வைரஸ் தான். அது எப்படி மனிதர்களுக்கு பரவியthu என்பதை விஞ்ஞானிகள் கண்டு பிடிக்கட்டும். நம் நாடு அதிக வெப்பம் இருக்கும் நாடு. தட்ப வெப்பநிலை 35 – 36 டிகிரியைத் தாண்டினால் வைரஸால் உயிர் வாழ முடியாது எனச் சொல்லி இருக்கிறார்.
இறைச்சி சாப்பிட்டால்
இறைச்சி சாப்பிட்டால்
அதோடு “சிக்கன், மட்டன், மீன் (கடல் உணவுகள்) போன்ற இறைச்சிகளைச் சாப்பிட்டால் கொரோனா பரவும் என்கிற தவறான புரிதல் பரவலாக இருக்கிறது. அப்படி எல்லாம் ஒன்றும் இல்லை. இறைச்சி சாப்பிட்டால் கொரோனா பரவும் என இதுவரை அறிவியல் பூர்வமாக நிரூபிக்கப் படவில்லை” என தன் தரப்பில் இருந்து தெளிவுபடுத்தி இருக்கிறார் ஜி எஸ் ஜி ஐய்யங்கார்.