அதிவேக இன்டர்நெட் வசதியை உருவாக்கிய ஆஸ்திரேலிய ஆராய்ச்சியாளர்கள்
வினாடியில் ஆயிரம் எச்டி திரைப்படங்களை பதிவிறக்கம் செய்யும் வகையில் அதிவேக இன்டர்நெட் வசதியை ஆஸ்திரேலிய ஆராய்ச்சியாளர்கள் உருவாக்கி உள்ளனர்.
மோனாஷ், ஸ்வின்பேர்ன் மற்றும் ஆர்.எம்.ஐ.டி. பல்கலைக் கழகங்களைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் குழு, வினாடிக்கு 44 புள்ளி 2 டெராபிட் இணைய வேகத்தை பதிவு செய்துள்ளார்கள்.
கண்ணாடி சிப்பில் வழக்கமாக பயன்படுத்தப்படும் 8 லேசர்களுக்கு பதிலாக மைக்ரோ காம்ப்((micro comb)) என்று அழைக்கப்படும் புதிய சாதனத்தை பொருத்தி, உலகின் இந்த அதிவேக இணைய வசதியை உருவாக்கி உள்ளதாக ஆராய்ச்சியாளர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
Source: Polimer News