Type Here to Get Search Results !

மஞ்சளுக்கு பதில் பச்சைக் கருவுடன் கோழி முட்டை: விஞ்ஞானிகள் ஆராய்ச்சி



மலப்புரத்தைச் சேர்ந்த ஷிஹாபுதீன் என்பவரது கோழிப் பண்ணையில் வளர்க்கப்பட்டு வரும் ஆறு கோழிகள் மஞ்சளுக்கு பதில் பச்சைக் கருவுடன் முட்டைப் போடுவதுதான் தற்போது அந்தப் பகுதி மக்களின் பேச்சாக உள்ளது.
 மஞ்சளுக்கு பதிலாக பச்சை நிறக் கருவுடன் முட்டையின் புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வேகமாகப் பரவியதை அடுத்து, பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த மக்களும் ஷிஹாபுதீனை தொலைபேசி வாயிலாகவும் தொடர்பு கொண்டு இது பற்றிக் கேட்டு வருகிறார்களாம்.
 கோழி முட்டையின் நிறம் மாறியிருப்பது குறித்து கேரள மாநில கால்நடை மருத்துவக் கல்லூரி விஞ்ஞானிகள் ஆராய்ச்சி மேற்கொண்டுள்ளனர்.


 சுமார் 9 மாதங்களுக்கு முன்பு தங்களது கோழிப் பண்ணையில் ஒரு கோழிப் போட்ட முட்டை பச்சை நிறத்தில் இருந்ததை கண்டறிந்தனர். அதை தங்கள் குடும்பத்தார் சாப்பிட்டு வருவதாகவும், ஆனால் அது உடல் நலனுக்கு நல்லதா என்ற கேள்வி மனதுக்குள் எழுந்து கொண்டே இருப்பதாகவும் ஷிஹாபுதீன் கூறினார்.
 சுவையில், சாதாரண கோழி முட்டையைப் போன்றே இந்த பச்சை நிற முட்டையும் இருக்கிறது. ஆனால் நிறம் தான் வேறுபடுகிறது. விரைவில் இந்த முட்டை மற்றும் இதுபோன்று முட்டையிடும் கோழிகளையும் விற்பனை செய்ய ஹிஷாபுதீன் திட்டமிட்டுள்ளாராம்.
 வேறு ஏதேனும் சிறப்பு உணவு மூலமாக இதுபோன்று கரு முட்டையின் நிறம் மாற வாய்ப்பிருப்பதாகவும், இது பற்றிய உண்மை நிலையைக் கண்டுபிடிக்க சில வாரங்கள் ஆகும் என்றும் விஞ்ஞானிகள் கூறுகிறார்கள்.
Source Dinamani

Top Post Ad

Below Post Ad