கூகுள் மேப் செயிலியில் இனி ஒரு குறிப்பிட்ட பகுதி எவ்வளவு பரபரப்பாக (Busy)இருக்கிறது என காட்டப்படும் என்று கூகுள் நிறுவனம் அறிவித்துள்ளது. இதற்கு முன்னர் கடைகளில் எந்த அளவுக்கு கூட்ட நெரிசல் இருக்கிறது என்று அறிந்துகொள்ளும் வசதி இருந்தது, தற்போது ஒரு பகுதியின் வாகன நெரிசலுடன் சேர்ந்து அந்த இடம் குறித்த அனைத்து தகவல்களும் காட்டப்படும் என தெரிவித்துள்ளது.