Type Here to Get Search Results !

ஆபரணத் தங்கத்தின் விலையில் அதிரடி திருப்பம்; முதல் முறையாக ஒரே நாளில் சவரனுக்கு ரூ.1,464 குறைவு.!!!

சென்னை, தங்கம் விலையில் கடந்த சில நாட்களாகவே ஏற்ற, இறக்கம் காணப்பட்டு வருகிறது. சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை, அமெரிக்க டாலரின் மதிப்பு மற்றும் பொருளாதார நிலையில் ஏற்ற, இறக்கம் ஆகியவற்றுக்கு ஏற்ப தங்கத்தின் விலை சந்தையில் நிர்ணயிக்கப்பட்டு வருகிறது. அதன்படி சென்னையில் இன்று ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.1,464 குறைந்து, சவரன் ரூ.37,440க்கு விற்கப்படுகிறது. கடந்த சில நாட்களாக தங்கத்தின் விலை சற்று குறைந்து வந்த நிலையில் இன்று ஒரே நாளில் ஆயிரம் ரூபாய்க்கு மேல் குறைந்துள்ளது. அதே சமயம் ஒரு கிராம் தங்கத்தின் விலை 183 ரூபாய் குறைந்து, ரூ.4,680க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிலோ வெள்ளியின் விலை நேற்றைய விலையில் இருந்து 400 ரூபாய் குறைந்து, ரூ.65,400க்கு விற்கப்படுகிறது.தங்கத்தின் விலை ஒரே நாளில் ரூ.1000-க்கு மேல் குறைந்துள்ளது சமீபத்தில் இதுவே முதல்முறை என்பது குறிப்பிடத்தக்கது.


Top Post Ad

Below Post Ad