நிவர் புயல் எதிரொலியால் ரத்து செய்யப்பட்ட புறநகர் ரயில் சேவை இன்று பிற்பகல் 3 மணிக்கு மீண்டும் தொடங்குகிறது.
நிவர் புயல் இன்று அதிகாலை கரையைக் கடந்த நிலையில் தமிழகத்தில் மெல்ல மெல்ல இயல்பு நிலை திரும்பிவரும் நிலையில், சென்னையில் பொதுமக்கள் வசதிக்காக இன்று பிற்பகல் 3 மணி முதல் இரவு 8 மணி வரை ஒரு மணி நேரத்திற்கு ஒரு புறநகர் ரயில் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.