Type Here to Get Search Results !

ஆர்டிஜிஎஸ் மூலம் நாளை முதல் 24 மணி நேரமும் பணம் அனுப்பலாம்

ஆர்டிஜிஎஸ் முறை என்பது, மிகப்பெரிய தொகையை ஒரு வங்கியில் இருந்து, அதே வங்கியின் வேறொரு கிளைக்கும், மற்ற வங்கிகளுக்கும் அனுப்ப பயன்படுத்தப்படுவது. ரூ.2 லட்சத்திற்கு மேல் பணம் அனுப்புவதற்கு, இந்த முறைதான் பயன்படும்.

தற்போது ஆர்டிஜிஎஸ் முறை என்பது வங்கியின் வேலைநாட்களில் மட்டும் காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை மட்டும் வாடிக்கையாளர்களுக்கு அளிக்கப்படுகிறது . வார விடுமுறை நாட்கள், பண்டிகை நாட்களில் சேவை இருக்காது.

இந்நிலையில், ரிசர்வ் வங்கி கவர்னர் சக்திகாந்த தாஸ், தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்ட பதிவில் கூறியுள்ளதாவது: ‛‛ஆர்டிஜிஎஸ் முறை நாளை இரவு 12:30 மணி முதல் 24 *7 நேரமும் செயல்படும். இதனை சாத்தியாக்க பணியாற்றிய ரிசர்வ் வங்கி, ஐஎப்டிஏஎஸ்(Indian Financial Technology and Alied Services) மற்றும் உடன் பணியாற்றியவர்களுக்கு நன்றி. அதிகளவு பணத்தை 24 *7*365 அனுப்பும் முறையை செயல்படும் சில நாடுகளில் இந்தியாவும் ஒன்று. இதன் மூலம் தொழில் செய்யும் எளிதாகும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

ஏற்கனவே கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் முதல் நெப்ட் சேவை, ஆண்டு முழுவதும் கிடைக்கும் வகையில் செயல்படுத்தப்பட்டது. நெப்ட், ஆர்டிஜிஎஸ் சேவைக்கு கட்டணம் விதிக்கும் முறையை ரிசர்வ் வங்கி ரத்து செய்துள்ளது.

Top Post Ad

Below Post Ad