Type Here to Get Search Results !

லைக் போடுங்க, சப்ஸ்கிரைப் பண்ணுங்க இணையத்தில் அரங்கேறும் மெகா மோசடி


லைக் போடுங்க, சப்ஸ்கிரைப் பண்ணுங்க இணையத்தில் அரங்கேறும் மெகா மோசடி ஒவ்வொரு லைக்கிற்கும் 18 ரூபாய் சம்பாதிக்கலாம்!

அதன்படி ஒரு நாளைக்கு 1800 ரூபாயும்,மாதம் 54 ஆயிரம் வரை சம்பாதிக்கலாம் என செயலியில் பட்டியிலிட்டுள்ளனர்.

ஃபேஸ்புக் மற்றும் யூடியுபில் லைக் மற்றும் சப்ஸ்கிரைப் செய்தால் ஆயிரக்கணக்கில் சம்பாதிக்கலாம் என கூறி கோடிக்கணக்கில் மோசடி செய்த செயலிகள் குறித்து சென்னை சைபர் காவல்நிலையங்களில் புகார் குவிந்த வண்ணம் உள்ளன.

பேஸ்புக் மற்றும் யூடியூப் புகளில் அதிக லைக்குகளையும், சப்ஸ்கிரைபர்களையும் கொண்டுள்ளவர்களுக்கு ஏற்ப யூட்யூப் நிறுவனமே டாலர்களில் பணம் கொடுக்கும். 

அதேபோன்று பதிவேற்றம் செய்யப்படும் வீடியோக்களின் நடுவே விளம்பரங்கள் மூலமாகவும் சம்பாதிக்கலாம். ஒரு வீடியோவுக்கு லைக் மற்றும் சப்ஸ்க்ரைப் என்பது மக்கள் எளிதில் போடமாட்டார்கள்.


இதை அடிப்படையாக வைத்து மோசடி செய்துள்ளனர்.லைக் மற்றும் சப்ஸ்க்ரைப் செய்தால் காசு என கூறி செயலியை உருவாக்கியுள்ளனர்.

மீ சேர்(me share) மற்றும் லைக் சேர் (like share) என்ற பெயரில் செயலியை உருவாக்கி மோசடி அரங்கேற்றியுள்ளனர்.
இந்த செயலிகளை ப்ளே ஸ்டோர் மூலம் பதிவிறக்கம் செய்யமுடியாது.
தனியாக லிங்குகள் மூலமாகதான் பதிவிறக்கம் செய்யமுடியும்.

மீ சேரில் இலவசமாக 3 யூடியுப் வீடியோக்களுக்கோ அல்லது பேஸ் புக் வீடியோக்களுக்கோ லைக் செய்து சப்ஸ்க்ரைப் செய்தால் ஒரு லைக் மற்றும் சப்ஸ்க்ரைப்பிற்கு 8 ரூபாய் சம்பாதிக்கலாம்.இந்த பணமானது அந்த செயலியில் பணம் சேமித்து வைக்க உள்ள வாலட்டில் சேரும்.

அதற்கு பிறகு அதிகம் சம்பாதிக்க வேண்டும் என்றால் ,பல திட்டங்கள் உள்ளன. அப்டேட், ஏங்கர், இண்டெர்னட் செலிபிரிட்டி, ஆஸ்கர், கிங்க் என்ற பெயரில் திட்டங்கள் உள்ளன.

இதில் சேர 1000 ரூபாய் முதல் 60 ஆயிரம் வரை செயலிக்கு பணம் செலுத்த வேண்டும். அவ்வாறு செலுத்தி திட்டத்தில் சேர்ந்தால் ஒவ்வொரு திட்டத்தில் உள்ள வீடியோக்கள் லைக் மற்றும் சப்ஸ்க்ரைப் செய்தால் கொடுக்கப்படும் பணம் என்பது ஒரு வீடியோவிற்கு 8 ரூபாய் முதல் 18 ரூபாய் வரை சம்பாதிக்கலாம்.
குறிப்பாக கிங் என்ற திட்டத்தில் சேர்ந்தால் ஒரு நாளைக்கு 100 வீடியோக்களை லைக் மற்றும் சப்ஸ்க்ரைப் செய்யலாம்.

ஒவ்வொரு லைக்கிற்க்கும் 18 ரூபாய் சம்ப்பாதிக்கலாம். அதன்படி ஒரு நாளைக்கு 1800 ரூபாயும்,மாதம் 54 ஆயிரம் வரை சம்பாதிக்கலாம் என செயலியில் பட்டியிலிட்டுள்ளனர். இதனை பார்த்து ஆசைப்பட்டு பலரும் செயலியில் பல திட்டங்களில் பணத்தை செலுத்தியுள்ளனர்.

அதோடு மட்டுமல்லாது எம்.எல்.எம் போன்று செயலியில் வேறு யாரையாவது சேர்த்து குழுக்களை உருவாக்கினால், அவர்கள் லைக் மற்றும் சப்ஸ்க்ரைப் செய்தால் கமிஷனில் சம்பாதிக்கலாம் என மோசடி செய்துள்ளனர்.

முதல்  இரண்டு ,மூன்று நாட்களில் சம்பாதிக்க ஆரம்பித்தவுடன் செயலியை செயலிழந்து விடுவதை கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

குறைந்த பட்சம் 200 ரூபாய் சம்பாதித்தால் தான்,செயலியின் வாலட்டில் சேரும் பணத்தை வங்கி கணக்கிற்கு மாற்ற முடியும்.ஆனால் அதற்குள்ளாக செயலியை செயலிழக்க செய்துவிடுகின்றனர் .இதற்காக தனி டெலிக்ராம் குழுவும்,வாட்ஸப் குழு அமைத்து மோசடி செய்துள்ளனர்.

செயலிழக்க செய்தவுடன் வேறு பெயரில் லைக் சேர் என்ற ஆரம்பித்துள்ளனர்.இதனை கண்டறிந்த இளைஞர்கள் சென்னை சைபர் காவல் நிலையங்களில் புகார் அளித்து வருகின்றனர். 

இந்த மோசடியை கண்டுபிடித்த இளைஞர்கள் சென்னை காவல் ஆணையரகத்தில் புகார் அளித்துள்ளனர். 
இந்த செயலி மூலம் தமிழ்நாட்டில் மட்டுமல்லாது இந்தியா முழுவதும் பலர் ஏமாந்துள்ளதாக தெரிவித்துள்ளனர்.

லைக் செய்தால் பணம் கிடைக்கும் என்ற ஆசையில் பலரும் ஏமாந்துள்ளதாக தெரிவித்துள்ளனர்.

அதுவும் ஏமாந்தவர்கள் செலுத்திய பணமானது, சென்னை பாரிமுனையில் உள்ள தனியார் வங்கியில் உள்ள வங்கி கணக்கிற்கு சென்றதையும் கண்டுபிடித்துள்ளனர். 

லைக் மற்றும் சப்ஸ்க்ரைப் செய்தால் ஆயிரக்கணக்கில் சம்பாதிக்கலாம் என நூதன முறையில் மோசடி செய்யும் கும்பல் தொடர்பான புகார்கள் மீது சைபர் க்ரைம் போலிசார் விசாரணையை துவங்கியுள்ளனர்.

ஏற்கனவே ஆன்லைன் ரம்மி போன்ற விளையாட்டால் பணமிழந்து தற்கொலைகள் அதிகமானதால், ஆன்லைன் ரம்மியை தடை செய்த அரசு இது போன்ற செயலிகளையும் தடை செய்ய வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.

வாட்ஸ் அப் பகிர்வு

Top Post Ad

Below Post Ad