Type Here to Get Search Results !

டிசம்பர் 31ஆம் தேதி முடிவடைய உள்ள ஓட்டுநர் உரிமம், வாகனப் பதிவுச்சான்று மார்ச் 31 வரை செல்லும் - மத்திய சாலைப் போக்குவரத்து அமைச்சகம்



டிசம்பர் 31ஆம் தேதி முடிவடைய உள்ள ஓட்டுநர் உரிமம், வாகனப் பதிவுச் சான்று ஆகியவற்றின் செல்லுபடிக் காலத்தை மார்ச் 31 வரை மத்தியச் சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை அமைச்சகம் நீட்டித்துள்ளது. 
கொரோனா பரவலைத் தடுக்கும் நடவடிக்கையாக ஓட்டுநர் உரிமம், வாகனப் பதிவுச் சான்று, வாகனங்களுக்கான அனுமதி ஆகியவை முடிவடையும் சூழலில் அவற்றைப் புதுப்பிக்கும் காலம் ஏற்கெனவே டிசம்பர் 31 வரை நீட்டிக்கப்பட்டது.
இந்நிலையில் கொரோனா சூழலைக் கருத்திற்கொண்டு டிசம்பர் 31ஆம் நாள் முடிவடைய உள்ள செல்லுபடிக் காலத்தை மார்ச் 31 வரை மத்திய அரசு நீட்டித்துள்ளது.
இது குறித்து அனைத்து மாநிலத் தலைமைச் செயலாளர்களுக்கு மத்தியச் சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை அமைச்சகம் எழுதியுள்ள கடிதத்தில், போக்குவரத்து தொடர்பான சேவைகளில் மக்கள் சமூக விலகலைக் கடைப்பிடிக்க இது உதவும் எனக் குறிப்பிட்டுள்ளது. 

Top Post Ad

Below Post Ad