Type Here to Get Search Results !

கலெக்டர், மருத்துவ நிபுணர்களுடன் முதல்வர் நாளை ஆலோசனை: புதிய கட்டுப்பாடுகள் குறித்து முக்கிய முடிவு



பரிணாமம் அடைந்த வீரியமிக்க கொரோனா வைரஸ் உலக அளவில் வேகமாக பரவி வரும் நிலையில், தமிழகத்தில் புதிய கட்டுப்பாடுகள் கொண்டு வருவது குறித்து முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி நாளை அனைத்து மாவட்ட கலெக்டர்கள் மற்றும் மருத்துவ நிபுணர்களுடன் ஆலோசனை நடத்த உள்ளார். இதை அடுத்து புதிய கட்டுப்பாடுகள், தளர்வுகள் குறித்து முக்கிய முடிவுகள் எடுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. கொரோனா பரவுவதை கட்டுபடுத்த கடந்த மார்ச் 25ம் தேதி முதல் டிசம்பர் 31ம் தேதி வரை ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த ஊரடங்கு அமலில் இருந்தாலும் பொதுமக்களின் அத்தியாவசிய தேவைகளுக்காக கடைகள், ஓட்டல்கள், மால், அரசு மற்றும் தனியார் அலுவலகங்கள், ரயில், பேருந்து, ஆட்டோ, கார் ஓட அனுமதி, கோயில்களை திறந்து வழிபாட்டுகளுக்கு அனுமதி என பல்வேறு தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளது.


இந்த நிலையில் பிரிட்டனின் உருமாறிய வீரியமிக்க கொரோனா வைரஸ் பரவ தொடங்கியுள்ளது. இதை தொடர்ந்து மீண்டும் வெளிநாடுகளில் இருந்து தமிழகம் வரும் பயணிகள் தனிமைப்படுத்தப்பட்டு வருகின்றனர். தற்போது, சென்னையில் 1034 பேர் உட்பட 2391 பேர் வந்துள்ளனர்.

அவர்களிடம் பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. மேலும், அவர்களிடம் தொடர்பில் இருந்தவர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். இந்த நிலையில் விமான நிலையம் முழுவதும் சுகாதாரத்துறை கட்டுபாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது.

தொடர்ந்து, வெளிநாடுகளில் இருந்து வரும் பயணிகள் முழு பரிசோதனை செய்யப்பட்டு, அவர்கள் பரிசோதனை முடிவு வரும் வரை தனிமைப்படுத்தப்பட்ட பிறகே வீட்டிற்கு செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளனர்.


இந்த சூழ்நிலையில், தலைமை செயலாளர் சண்முகம் க


Top Post Ad

Below Post Ad