இந்தியா முழுவதும் தற்போது ஆயிரத்து 89 சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்டாலும், அதில் 40 விழுக்காடு இருக்கைகள் காலியாக இருப்பதாக ரயில்வே வாரியத் தலைவர் வி.கே. யாதவ் தெரிவித்துள்ளார்.
டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், கொரோனா பரவலால் ரயில் சேவைகள் நிறுத்தப்பட்டதால், ரயில்வேக்கு பெரும் இழப்பு ஏற்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
தொற்று பரவல் நிற்காத நிலையில், ரயில் சேவைகளை, முழுமையாக துவக்குவது பற்றி, இப்போது எதுவும் கூற முடியாது என்று தெரிவித்த வி.கே. யாதவ், நிலைமைக்கு ஏற்ப, ரயில்களின் எண்ணிக்கை அதிகரிக்கப்படும் என்றும் குறிப்பிட்டார்.