❖ கொரோனா தடுப்பூசி விருப்பமுள்ளவர்களுக்கு அளிக்கப்படும் என்று மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது. இன்னும் சில வாரங்களில் இந்தியாவில் கொரோனா தடுப்பூசி விநியோகம் தொடங்க உள்ளது. முதல் கட்ட முன்னுரிமை பட்டியலில் வைரஸ் தொற்றுக்கான ஆபத்து நிறைந்தவர்கள் உள்ளனர்.
❖ மருத்துவர்கள், சுகாதார பணியாளர்கள் ஆகியோர் அதில் அடக்கம். 2 ஆம் குழுவில் 50 வயதுக்கு மேற்பட்டவர்கள் மற்றும் ரத்த அழுத்தம், சர்க்கரை நோய், குடல் மற்றும் சிறுநீரக நோய் உள்ள 50 வயதுக்குட்பட்டவர்களுக்கு தடுப்பூசி வழங்க உள்ளனர்.