Type Here to Get Search Results !

பயனுள்ள கூகுள் செயலிகள்(Applications) பற்றி தெரிந்து கொள்ளுங்கள்

 

1.#Google_Assistant :  


இந்தியர்களிடம் மாட்டிக்கொண்டு ரொம்பவே சிரமப்படும் ஒரு செயலி. ஏழைகளுக்கு ஏற்ற எள்ளு உருண்ட மாதிரி iphone  இல்லாதவர்களுக்கு Google Assistant. சில கண் பார்வை அற்றவர்கள் உபயோகிப்பதை பார்த்து இருக்கிறேன்.

2.#Google_Duo:  


வீடியோக் கால் செய்ய உதவும் ஒருசெயலி. போன் நம்பர் இல்லாமல் கூட போன் செய்ய முடியும்.

3.#Google_Docs:  


ஆன்லைனில் பாதுகாப்பாக documents உருவாக்க மற்றும் பார்க்க உதவும் ஒரு செயலி. மைக்ரோசாப்ட் ஆபீஸ் உங்களது போனில் இல்லையென்றால் இதனை உபயோகப் படுத்தலாம். பாதுகாப்பான ஒன்று.

4.#Google_find_my_device :  


ஆன்டிராய்டு இயங்கு தளத்தை கொண்டு இயங்கும் கருவிகளை காணாமல் போனால் கண்டறிய உதவும் ஒரு செயலி ஆகும். ஆனால் ஒன்று அந்த போனின் GPS மற்றும் இணைய சேவை On ஆகி இருக்க வேண்டும். switch off செய்யப்படாமல் இருப்பின் கண்டறிய முடியும்.

5.#Google_Fit :  


உங்களுடைய ஆரோக்கியத்தினை track செய்ய உதவும் ஒரு செயலி.

6.#Google_Drive:  


கூகிளில் அக்கவுண்ட் உள்ளவர்களுக்கு Google நிறுவனத்தால் வழங்க படும் 15 ஜிபி அளவுள்ள இலவச கிளவுட் சேமிப்பு செயலி. நம்முடைய முக்கியமான ஆவணங்களை இதில் ஸ்கேன் செய்து சேமித்து வைத்து கொள்ளலாம். மேலும் தேவைப்படும் இடங்களில் எளிதாக நகல் எடுத்தும் கொள்ளலாம்( சீனா தவிர).

7. #Google_Indic_keyboards:  


இந்தியாவிற்கென பிரத்தியேகமாக உருவாக்கப்பட்ட செயலி. இந்தியாவின் பன்மொழி அமைப்பினை உணர்ந்து இந்தியர் ஒவ்வொருவரும் தங்கள் தாய்மொழியில் தட்டச்சு செய்ய உருவாக்க பட்ட செயலி.

8.#Google_keep :  


நமக்கு திடீர்னு தோணும் ஐடியா மற்றும் notes , numbers இதை சேமித்து வைக்க உதவும் செயலி.

9.#Google_Earth : 

 
முன்பெல்லாம் உலகத்தை நிமிட நேரத்தில் சுற்ற முடியும் என்று கூறினால் யாரும் நம்ப மாட்டார்கள். ஆனால் இந்த செயலி இருந்தா one sec சுற்ற முடியும். அதுவும் இல்லாமல் நம்ம இஷ்டத்துக்கு பூமியை சுற்றி விளையாட முடியும். குழந்தைகளுக்கு ஒரு பயனுள்ள செயலி இது.

10. #Blogger:  


உங்களுக்கான இலவச வலைப்பக்கம் உருவாக்க உதவும் செயலி. உங்கள் வலைத்தளம் அதிக பார்வையாளர் எண்ணிக்கை அடையும்போது Google AdSense உபயோக படுத்தி உங்களின் எழுத்து திறன் மூலம் பணம் சாம்பாத்திக்க முடியும்.

11.#Google_translate:  


உங்களுக்கு தெரியாத மொழியில் உள்ள வார்த்தைகளை உங்கள் மொழியில் மொழி பெயர்ப்பு செய்ய உதவும் செயலி. இதன் சிறப்பு அம்சம் ஒருவேளை உங்களுக்கு அந்த வார்த்தை எந்த மொழியில் உள்ளது என தெரியவில்லை என்றால் detect languages என்ற பொத்தானை அழுத்தி அறிந்து கொள்ளலாம். 96% நம்பகமான செயலி

12.#Photos:  


உங்களது புகைப்படங்களை கிளவுட் storage இல் சேமிக்க உதவும் செயலி. மேலும் அந்த புகைப்படங்கள் எப்போது எடுக்கப்பட்டது, நாள் குறித்த விவரங்கள் அடிப்படையில் அதுவே வரிசை அமைத்து சேமித்து கொள்ளும்.

13.#Google_Sheets:  


சிம்பிளா சொன்னா Excel sheets. MS office தங்களது கைபேசியில் இல்லாதவர்கள் ஆன்லனிலேயே எக்சல் சீட் உருவாக்க மற்றும், பார்க்க உதவும் செயலி.

14.#Voice_Access:  


கையினை உபயோக படுத்துமால் உங்களது குரல் மூலம் கைப்பேசியினை கட்டுபடுத்த மற்றும் செயல்பட உதவும் செயலி.

15.#Google_Podcast's:  


Podcasts கேட்பவர்களுக்கு உதவும் செயலி. தமிழில் கூட சில பிரபலமான யூடியூப் வீடியோக்களின் podcasts இதில் உள்ளது.

16.#Google_slides :  


சிம்பிளா சொன்னா, Ms PowerPoint க்கான மாற்று படைப்பு.

17.#Google_PDF_viewer:  


Pdf டாகுமெண்ட்களை திறந்து பார்க்க உதவும் செயலி. குறைந்த storage அளவே உடையது.

18.#Google_Tasks:  


உங்களது இலக்குகளை மற்றும் பணிகளை குறித்து வைத்து கொண்டு உங்களுக்கு சரியான நேரத்தில் நியாபக படுத்த உதவும் செயலி.

19.#YouTube:  

உலகில் இரண்டாம் வீடியோ தளமான YouTube பலரது திறமைகளை வெளிப்படுத்த ஒரு வாய்ப்பாகவும் இருந்தது. அதன் மூலம் நாம் வருமானமும் பெறலாம். தன்னிடம் இருக்கும் கேள்விகளை மற்றவர்களிடம் கேட்கமுடியாத தருணத்தில் YouTube நமக்கு கை கொடுக்கும். அது எந்த சந்தேகம் என்றாலும்…

20.#Files_by_Google :  

உங்களுடைய செல்போனின் storage திறனை அறியவும், தேவையற்ற temp files ,chache நீக்க உதவும் application. இது மட்டும் அல்லாமல் உங்களுடைய செல்போனில் உள்ள வீடியோ , போட்டோஸ் ஷேர் செய்யும் (அதாங்க shareit) வசதியும் இதில் உள்ளது.

21. #Google_Pay :  

எல்லோருக்கும் தெரிந்த ஒன்று தான். பணம் அனுப்ப அல்லது பெற உதவும் ஒரு செயலி

இந்த செயலிகளை எல்லாம் பயன்படுத்த ஒரு Google account மட்டும் இருந்தால் போதுமானது. தனியாக பணம் செலுத்த தேவையில்லை... அனைத்தும் இலவசமானது.


Top Post Ad

Below Post Ad